ஓகி புயல்.. மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம்!
ஓகி புயல் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

சென்னை: ஓகி புயல் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
ஓகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக்கோரி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஸ்டாலின் ஓகி புயல் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தமான போக்கை கடைபிடித்ததாக குற்றம்சாட்டினார். முதல்வர் கன்னியாகுமரிக்கு சென்றதை வரவேற்கிறோம் என்ற ஸ்டாலின் ஆனாலும் இது காலங்கடந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
புயலால் மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை கூட தமிழக அரசால் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட முதல்வருக்கு துணிச்சல் இல்லை என்றும் அவர் சாடினார்.
கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தான் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனை என்பதால் மரியாதையை கூட எதிர்ப்பார்க்காமல் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சென்று பார்த்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்திக்கவுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications