For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

க்ரீன் சிக்னல் காட்டிய டெல்லி.. அடுத்தது கோட்டைக்குள் ஆய்வு நடத்தப் போகிறார் ஆளுநர் பன்வாரிலால்?

தமிழக ஆளுநருக்கு டெல்லி கொடுத்த க்ரீன் சிக்னலைத் தொடர்ந்து அனேகமாக அடுத்து தலைமை செயலகத்தில்தான் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்த வாய்ப்புள்லதாக கூறப்படுகிறது.

By Raj
Google Oneindia Tamil News

Recommended Video

    க்ரீன் சிக்னல் காட்டிய டெல்லி.. அடுத்தது கோட்டைக்குள் ஆய்வு நடத்தப் போகிறார் ஆளுநர்?- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு குடைச்சல் கொடுக்க டெல்லி க்ரீன் சிக்னல் காட்டிவிட்டதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது ஆய்வுகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளாராம். அனேகமாக அடுத்த ஆய்வு தலைமைச் செயலகத்திலும் நடைபெறலாமாம்.

    தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்படும் பொழுதே எப்படியெல்லாம் இங்கே குடைச்சல கொடுக்க வேண்டும் என ப்ளான் செய்தது டெல்லி. இதற்கேற்பத்தான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் செயல்பட்டு வருகிறார்.

    தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்களே இல்லை என்கிறது தேர்தல் ஆணையம். ஆனால் எதிர்க்கட்சிகளும் ஆளுநரும் இதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

    நேரடி தலையீடு

    நேரடி தலையீடு

    அரசியல் நகர்வுகளை விட்டுவிட்டு ஆட்சி அதிகாரத்தை டெல்லி, ஆளுநர் மூலமாக நேரடியாகவே கையிலெடுத்து விட்டது. கோட்டையிலும் ஆளுநர் மாளிகையிலும் டெல்லியின் விசுவாச அதிகாரிகள் முக்கிய பொறுப்புகள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.

    குமரியில் ஆளுநர்

    குமரியில் ஆளுநர்

    இதனால் கோவை, திருப்பூரைப் போல நெல்லையிலும் ஆய்வை நடத்தியிருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால். அத்துடன் கன்னியாகுமரிக்குப் போய் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தார் பன்வாரிலால்.

    சென்னை திரும்பிய ஆளுநர்

    சென்னை திரும்பிய ஆளுநர்

    இருப்பினும் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காததால் கொந்தளிப்பில் இருக்கும் கடலோர கிராமங்கள் ஆளுநருக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதனையடுத்து சென்னை திரும்பினார் ஆளுநர்.

    கோட்டையில் ஆய்வு

    கோட்டையில் ஆய்வு

    இந்நிலையில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இருந்தபோதும் டெல்லி க்ரீன் சிக்னல் கையில் இருப்பதால் அடுத்ததாக கோட்டையிலும் கூட பன்வாரிலால் நுழைந்து ஆய்வு நடத்தும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கூறப்படுகிறது.

    English summary
    DMK Working President M.K. Stalin said the party will hold peaceful protests against Tamil Nadu Governor Banwarilal Purohit in districts where he goes for review of development works.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X