ஆட்சியை அகற்றாமல் விட மாட்டேன்.. நான் கருணாநிதியின் மகன்.. சேலத்தில் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்!
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அ.தி.மு.க அரசைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சேலம்: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அ.தி.மு.க அரசைக் கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க அரசைக் கண்டித்து சென்னை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சேலத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சேலத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஸ்டாலின் திமுக தலைவரான பின் செய்த முதல் ஆர்ப்பாட்டம் ஆகும் இது.

போராட்டம் தொடரும்
அதில் அவர் பேசியதாவது, மனித உரிமைகளை தமிழக அரசு அடகு வைத்துள்ளது. தமிழக மக்கள் பார்க்காத ஊழல்களை அதிமுக அரசு செய்து வருகிறது. மக்கள் மீது அரசு நேரடி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்

ஊழல் ஆட்சி
தற்போது இருக்கும் அரசு பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் நினைக்கிறார்கள் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும். 33 அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர். ஊழலின் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமிதான். அவரது அமைச்சர்கள் அதன் கூட்டாளிகள்.

சேலம் ஏன்
சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்றனர். ஆனால் சேலம் மாவட்டத்தை நான் விருப்பப்பட்டு தேர்வு செய்தேன். சேலத்திற்கு எதிராக அரசு காய் நகர்த்தி வருகிறது. விவசாய நிலங்களை அழிக்க பார்க்கிறது. ஊழல் செய்வதில் யார் சிறந்தவர் என்று போட்டி வைத்தால் எல்லா அதிமுககாரர்களும் முன்னிலையில் இருப்பார்கள்.

யாரின் மகன்
நான் ஆதாரத்துடன்தான் பேசுகிறேன். நான் கருணாநிதியின் மகன். தைரியம் இருந்தால், நான் பேசியதில் தவறு என்றால் வழக்கு போடட்டும். அவர்களால் போட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் இல்லை. அதற்காக நீதிமன்றம் போகவே நேரம் இல்லை என்றுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications