ஜல்லிக்கட்டுக்காக தீவிரமடையும் போராட்டம்... திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
திருச்சி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வலியுறுத்தி திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள தமிழர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் திமுகவினர் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்களும் மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.
திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி அண்ணாசிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தால் திருச்சி அண்ணாசிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications