முரசொலியில் மு.க.ஸ்டாலினை எப்படி குறிப்பிடுவது... வைரலாகும் தகவல் பொய்யானது... திமுக மறுப்பு
முரசொலியில் மு.க.ஸ்டாலினை இனி கழக செயல்தலைவர் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று பரவும் தகவல்களில் உண்மை இல்லை என்று திமுக தெரிவித்துள்ளது.
சென்னை : முரசொலியில் மு.கஸ்டாலினை செயல்தலைவர் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்று பரவும் செய்தி தவறானதாகும் என்று திமுக விளக்கம் அளித்துள்ளது.
முரசொலி நாளிதழில் இனி மு.க.ஸ்டாலின் என்பதற்கு பதிலாக கழக செயல் தலைவர் என்றே குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதை சில நாளிதழ்களும் வெளியிட்டிருந்தன. ஆனால் இதை திமுக மறுத்து செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் ஆர் எஸ் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கழகத்தின் எழுச்சியையும் கழக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் அபரிமிதமான வளர்ச்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில நாளேடுகள் வேண்டுமென்றே விஷமத்தனமான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெயருக்கு பதிலாக இனி கழக செயல்தலைவர் என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்டாலின் என்ற பெயர் இடம்பெறக் கூடாது என கழக நாளேடான முரசொலி வெளியிடாத ஒரு செய்தியை வெளியிட்டதாக சில நாளேடுகள் விஷமத்தனமான பொய் செய்தியை வேண்டுமென்றே வெளியிட்டுள்ளன.
இதனை திமுக தலைமை கழகம் வன்மையாக கண்டிப்பதோடு இது போன்ற செய்தியையோ சுற்றறிக்கையையோ முரசொலியோ திமுகவோ வெளியிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆர்.எஸ்.பாரதி அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications