ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி - பெரியார் மண்ணில் 2 நாட்கள் மாநாடு நடத்தும் திமுக
திராவிட அரசியலுக்கு மாற்றாக ஆன்மீக அரசியலை முன்வைத்துள்ள ரஜினிகாந்துக்கு பதிலடி தரும் விதமாக தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பிரமாண்ட மண்டல மாநாட்டை நடத்துகிறது திமுக.
சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி தரும் விதமாக வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெற உள்ளது.
திராவிடர் இயக்க அரசியல் மட்டுமே கொடிகட்டிப் பறக்கும் தமிழகத்தில் இந்துத்துவா அரசியலை காலூன்ற வைக்க ரஜினிகாந்த் மூலமாக பாஜக திட்டமிடுகிறது என்பது பொதுவான விமர்சனம்.
திமுக தலைவர் கருணாநிதியை ரஜினிகாந்த் சந்தித்த போதே அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின், ஆன்மீக அரசியலுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

ஈரோட்டில் மாநாடு
இந்த நிலையில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெறும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையான ஒரு திராவிடர் இயக்க மாநாடாக, ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலுக்கு சரியான பதிலடி தரும் மாநாடாக இது அமைய இருக்கிறதாம்.

திராவிடர் மண்
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு அட்டாக் கொடுப்பதற்காகவே பெரியார் பிறந்த ஈரோட்டை திமுக தலைமை தேர்வு செய்திருக்கிறது. திமுகவின் இந்த விறுவிறு வியூகம் அக்கட்சி தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது. இதற்காக இப்போதே தயாராகி விட்டனர் ஈரோடு திமுகவினர்.

ரஜினியின் அரசியல் பாதை
30 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென அரசியலில் இறங்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இன்னமும் தனிக்கட்சியின் பெயரை அறிவிக்காவிட்டாலும் தாம் முன்வைக்கப் போவது ஆன்மீக அரசியல் என கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

பாஜக பாதையா?
உண்மை... உழைப்பு...உயர்வு... என்ற கொள்கையோடு ஆன்மீக அரசியல் பாதையில் பயணம் செய்ய உள்ளார் ரஜினிகாந்த். ரஜினியின் பாதை அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதே நேரத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பலமுனைகளில் இருந்தும் தாக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக, திமுக, சீமான் என பலமுனை தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டும் ரஜினி.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு











Click it and Unblock the Notifications