பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவது பெரிய துரோகம்.. திமுக மீது தமிழிசை பாய்ச்சல்

பிரதமருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் திமுக தலைமையில் நடைபெற்றுள்ளது.

DMK should not show black flag during Modis Tamilnadu visit says Tamilisai Soundararajan

இந்த நிலையில் காவிரி பிரச்சனையில் துரோகம் செய்ததாக கூறி ஏப்ரல் 15ம் தேதி தமிழகம் வரவிருக்கும் பிரதமர் மோடிக்கு திமுக சார்பில் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்தார்.

அதில் ''பிரதமருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்துவது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். காவிரி பிரச்சனைக்காக பிரதமருக்கு கருப்பு கோடி காட்டுவதா. தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளையும் உடனே தூர்வார வேண்டும். நீர்நிலைகளை தூர்வாருவது தண்ணீர் பிரச்சனையை குறைக்கும்'' என்றுள்ளார்.

மேலும் ''தமிழக மக்களுக்காக பாஜக எப்போதும் போராடும்.மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றி முதல்வரிடம் பாஜக மனு அளிக்கும். பாஜக மக்களுடன் இருக்கிறது.'' என்றும் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+