பொள்ளாச்சி மாணவிகளின் நிலைக்கு ஜெ.அரசின் மெத்தனப்போக்கே காரணம் – இள.புகழேந்தி சாடல்
பொள்ளாச்சி: அரசு விடுதியில் படித்துக் கொண்டிருந்த பொள்ளாச்சி மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்துக்கு தமிழக அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று திமுக மாணவர் அணிச் செயலாளர் இள.புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீரழிவு தினசரி நடக்கின்ற சாதாரண நிகழ்வுப் போல் உள்ளது. குற்றநிகழ்வுகள் நடைபெறுவதைப் பற்றிகவலைப்படாமல் ஜெயலலிதா தன் புகழ்பாடிகளை வளர்ப்பதிலும், பதவிகளை வாரிவழங்குவதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
பல அதிகாரிகள் முதலமைச்சரை சுற்றியே வருவதும், ஆராதனை செய்வதும், அதிமுக வினருக்கு போட்டியாக ஹெலிக்காப்டரை கும்பிட்டு மகிழ்வதுமாக உள்ள கேவலம் வேறு எங்கும் காண முடியாத அவலம்.
நாட்டு நிலையை சரியாக புரிந்து கொள்ளாமல் ஜெயா தன் விருப்பப்படி அறிக்கைகளைவிட்டு ஆட்சி செய்கிறார் என்பதற்கு உதாரணமாகஜூன் 1 முதல் மின்வெட்டே இருக்காது என அறிக்கை வெளியிட்ட அவரைவேக்காட்டுத்தனமே சாட்சியாக உள்ளது.
அடிக்கடி அதிகாரிகளை மாற்றுவது, தனது கொத்தடிமையான மந்திரிகளை பந்தாடுவது, நிர்வாகத்தை சீர்ப்படுத்துவதற்காக அல்ல, சுயநலக் காரணங்களுக்காக என்பதை வெளிப்படையாக பொள்ளாச்சி மாணவிகள் கடத்தப்பட்டு பாலியல் வன்முறை செய்துள்ள நிகழ்வு நிரூபித்துள்ளது.
ஜெயா அரசின் சமூகநலத் துறையின் அலட்சியம், மாணவ-மாணவிகளின்விடுதிகளை உரிய காலங்களில் ஆய்வு செய்யாத கடமைத் தவறிய செயல், விதிமீறல்களை செய்து மாணவிகளை தங்கவைத்த சட்டவிரோதப் போக்கை தடுக்கநடவடிக்கை எடுக்காத எதேச்சதிகாரம். அத்துறை தூங்கிய வழிய முதல்அமைச்சர்ஜெயாவே முன்னுதாரணமாக உள்ளார். மார்ச் 17 ஆம் தேதி எழுத்து மூலமாக புகார்அவ்விடுதியின் பாதுகாப்பின்மை குறித்து ஜெயாவின் மாவட்ட நிர்வாகத்திடமும் சமூகநலத்துறையிடம் பொது ஆர்வலர் மூலமாக அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனு கொடநாட்டில் ஜெயா தூங்குவது போல, அலுவலக குப்பைக் கூடையில் தூங்கிவிட்டது. முறையாக அரசு நிர்வாகம் இயங்கியிருந்தால், பரிதாபதற்குரிய 5வது மற்றும் 6 ஆவது பயிலும் சிறுமிகள் கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
சம்பவ விடுதி, அங்கீகாரம் இல்லா விடுதியென தேவாலய முன்னாள் நிர்வாகி புகார் தந்துள்ளார். பல மாதங்களாக ஏன் நடவடிக்கை எடுக்காமல் அரசு தள்ளிப்போட்டது? காரணம் என்ன? இனியாவது விழித்து நாடு முழுவதும் இப்படிப்பட்ட விடுதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். செய்யுமா ஜெயாஅரசு என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.
திமுக மாணவர் அணியினர் ஜெயா அரசின் செயல்பாடுகளை இனி கண்காணிப்பர். ஜெயலலிதாவின் தூக்கத்தை கலைக்கும் போராட்டங்களை செய்துமாணவ,மாணவியர் துக்கத்தைப் போக்கும் செயலில் திமுக மாணவர் அணி தீவிரமாக ஈடுபடும் என எச்சரிக்கை செய்கிறேன்.
பொள்ளாச்சி மாணவிகளின்நிலைக்கு வேதனையையும் இதற்கு காரணமாக தூங்கி வழியும் அரசுத்துறையைநடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு இள. புகழேந்தி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications