அனைத்துகட்சிகளின் பங்களிப்பை அதிமுக அறுவடை செய்கிறது : திமுக குற்றச்சாட்டு
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கிடைத்த வெற்றி 5 மாவட்ட மக்களை சேரும். அனைத்து கட்சிகளின் பங்களிப்பையும் அ.தி.மு.க. அறுவடை செய்ய முயற்சிக்கிறது துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தபோது இதனை தெரிவித்தார். இன்று காலை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ், 'முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட நீதி' என்றொரு அறிக்கை வாசித்தார்.
அதில், திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து பேசியிருந்தார். முதல்வர் அறிக்கையை வாசித்து முடித்தவுடன் திமுக உறுப்பினர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பேரவையில் அது தொடர்பாக பேச அனுமதி கோரினர். ஆனால், சபாநாயகர் தனபால், அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். விதி எண் 110-கீழ் வாசிக்கப்பட்ட அறிக்கை மீது விவாதம் நடத்த முடியாது என கூறினார்.
இதனையடுத்து திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன்: முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததே தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் என்று தெரிவித்தார்.
மேலும், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கிடைத்த வெற்றி 5 மாவட்ட மக்களை சேரும். அனைத்து கட்சிகளின் பங்களிப்பையும் அ.தி.மு.க. அறுவடை செய்ய முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications