வழக்கம் போல சட்டசபையில் இருந்து தி.மு.க, காங், பு.தமிழகம் வெளிநடப்பு- வெளியேற்றம்!!
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க, காங்கிரஸ், புதிய தமிழக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. மேலும் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கக் கோரி சபாநாயகரை முற்றுகையிட்டதால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றவும் செய்யப்பட்டனர்.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான 2வது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் பிரச்னை குறித்து பேச தி.மு.க.வினர் வாய்ப்பு கோரினர்.
ஆனால் ஆளுநர் உரை மீது மட்டும் கேள்வி எழுப்ப வேண்டும் என சபாநயகர் தனபால் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

தி.மு.கவைத் தொடர்ந்து புதிய தமிழகம், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பொள்ளாச்சி ஜெயராமனுக்கு எதிர்ப்பு
இந்த வெளிநடப்புக்குப் பின்னர் மீண்டும் சபைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வந்தனர். அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்மொழிந்து பேசினார்.
அவர் தனது உரையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழந்தது என்று கூறினார். பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் ஜெ. அன்பழகன் கோமாளியாக செயல்படுவதாக பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
உடனே தி.மு.க. உறுப்பினர்கள், கோமாளி என்ற வார்த்தையை சபைக் குறிப்பில் இருந்து நீக்குமாறு முழக்கங்கள் எழுப்பினர். ஆனால், கோமாளி என்ற வார்த்தை நீக்கப்படுவதற்கான பட்டியலில் இல்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்தார்.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் சபாநாயகர் இருக்கை முன் கூடி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications