சிவாஜி சிலையை என்ன செய்யப்போகிறார்கள்? கேட்கிறார் ஸ்டாலின்
சென்னை: கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை குறித்து அரசு தனது முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது, என்.எல்.சி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசவும் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்.எல்.சி ஊழியர் பிரச்சனையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்ற அவர், பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிக்கவும் சபாநாயகர் அனுமதி தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை குறித்து அரசு தனது முடிவை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.
இதனிடையே தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க உறுப்பினர்கள் இன்று 2 வது முறையாக வெளிநடப்பு செய்தனர். தொழில்துறை மானியக் கோரிக்கை மீது தி.மு.க உறுப்பினர் ராமச்சந்திரன் பேசினார். தி.மு.க ஆட்சியில் தொழில்கள் தொடங்குவது மிக எளிமையாக இருந்தது என்று ராமச்சந்திரன் கூறினார். முதலீட்டாளர்கள் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது என ராமச்சந்திரன் பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்தனர்.

மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க சட்டசபையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சியினர் சபாநாயகரிடம் நேற்று கடிதம் கொடுத்து இருந்தனர். இதன் மீது சட்டசபையில் இன்று விவாதிக்க எதிர்க்கட்சியினர் முயன்றனர். அப்போது சபாநாயகர் நீங்கள் கொடுத்த கடிதத்துக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் சொல்லும் கருத்துக்களை மானியக் கோரிக்கையில் பேசுங்கள். தனியாக விவாதிக்க முடியாது. அதற்கு நேரம் இல்லை என்றார். இதனால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications