பிரியாணிக் கடைக்காரர்களை எம்பி எம்பி குத்து விட்ட கட்சி பிரமுகரை தூக்கி எறிந்தது திமுக!
Recommended Video

சென்னை: திமுகவுகக்குப் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி ரவுடித்தனத்தில் ஈடுபட்ட மாணவர் அணி பிரமுகர் யுவராஜை கட்சியை விட்டு தூக்கி எறிந்து (ஆனால் நிரந்தரமாக தூக்கி எறிந்திருக்க வேண்டும், சஸ்பெண்ட் செய்தது முழு நிவாரணம் அல்ல) பெயரை சற்றே காப்பாற்றியுள்ளது திமுக.
சாதாரண பிரியாணிக்காக ஒரு அப்பாவி கடைக்காரரை போட்டு புரட்டி புரட்டி அடித்து கட்சிப் பெயரை நாறடித்து விட்டார் யுவராஜ் என்ற அந்த நிர்வாகி. இவரது பெயர் யுவராஜ். விருகம்பாக்கம் பகுதி மாணவர் அணி திமுக நிர்வாகியாக இருந்தவர்.
[Read This: பிரியாணி தகராறு.. கூட்டாளிகளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து கேஷியரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி]
அங்குள்ள ஹோட்டலுக்குள் சிலருடன் புகுந்த இவர் பிரியாணி தீர்ந்து விட்டதாக கடை ஊழியர்கள் கூறியதால் கோபமடைந்து, கல்லாப் பெட்டியில் இருந்தவரை கும்மாங்குத்து விட்டுத் தாக்கியுள்ளார். அதுவும் எப்படி ஏதோ பாக்ஸிங் போடுவது போல ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி இவர் அடித்துள்ள விதம் திமுகவினரை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர வைத்துள்ளது.

இவர்களிடமா வீரத்தைக் காட்டுவது
போயும் போயும் புரோட்டாக் கடைக்காரரிடம் போயா இவர்கள் வீரத்தைக் காட்டுவார்கள் என்ற அவப் பெயரையும் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அதுவும் எந்த நேரத்தில் போய் எப்படி நடந்து கொண்டுள்ளனர் என்பதுதான் கட்சியினரை அதிர வைத்துள்ளது.

பயில்வான்கள்
கடைக்காரர்கள் சண்டை போடும் அளவுக்கு திராணி உள்ளவர்கள் அல்ல. ஏதோ பிழைப்புக்காக கடை நடத்துகிறார்கள். ஆனால் இந்த கும்பல் ஒவ்வொருவரும் பாக்ஸர் போல இருக்கிறார்கள். ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட் உள்ளே இறங்கும் அளவுக்கு பலவான்களாகவும் உள்ளனர். இவர்கள் போட்டு அடிக்க இந்த அப்பாவிகள்தான் கிடைத்தார்களா.

எப்படி அடிக்கலாம்
அதை விட்ருவோம்.. இப்படி கடைக்குள் விட்டு தாறுமாறாக அடிக்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது.. இதற்காகத்தான் கட்சியில் இருக்கிறார்களா இவர்கள்.. பேசிப் பேசியே பல புரட்சிகளை செய்த இயக்கத்தில் இருந்து கொண்டு இப்படி ரவுடித்தனம் செய்வதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ரவுடிகள் என்றுதான் அழைப்பார்கள்
அண்ணாவும், கருணாநிதியும் பேசி வளர்த்த இயக்கம் இது.. ரத்தம் சிந்தி உழைத்து வளர்த்த இயக்கத்தில் இருந்து கொண்டு இப்படி உடம்பை நன்றாக வலுவேற்றி வைத்துக் கொண்டு அப்பாவிகளை அடித்து நொறுக்கும் இவர்களை எப்படி கட்சியினர் என்று கூறுவார்கள் பொதுமக்கள்.. ரவுடிகள், அடியாட்கள் என்ற அளவுக்குத்தான் இவர்களை அழைக்க முடியும்.. அழைக்க வேண்டும்.

கருணாநிதியை அவமானப்படுத்துகின்றனர்
கருணாநிதி சுகவீனமாக இருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவையும் காண ஒட்டுமொத்த தமிழ் உலகமே காத்துக் கிடக்கிறது. ஆனால் பிரியாணி ஏண்டா தரலை என்று கேட்டு இப்படி மொத்திக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.. திமுகவுக்கு பெரும் அவமானம் இந்த குண்டர் கூட்டம்

நிரந்தரமாக விரட்டியடியுங்கள்
இதுபோன்றவர்களை அடித்துத் துரத்தி கட்சியை சரி செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அந்தப் பொறுப்பை இன்று அவர் உடனடியாக செய்தார். யுவராஜ் உள்ளிட்ட 2 குண்டர்களையும் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால் இது போதாது. நிரந்தரமாக இந்த ரவுடிகளை கட்சியை விட்டு நீக்க வேண்டும். ரவுடிகளுக்கு திமுகவில் இடமில்லை என்பதையும் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications