முதல்வர் பதவியில் ஓபிஎஸ் தான் தொடர வேண்டும்.. துரைமுருகன் திடீர் பேச்சால் அவையில் கலகலப்பு
தமிழக முதல்வராக 5 ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்க வேண்டும் என துரைமுருகன் வாழ்த்தி பேசியது சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
சென்னை: முதல்வர் பதவியில் 5 ஆண்டுகள் பன்னீர்செல்வம் தான் தொடர வேண்டும் என திமுக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார். பின்னர் பேசிய எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், முதல்வர் பன்னீர்செல்வம் 5 ஆண்டுகள் முதல்வராக தொடர வேண்டும் எனவும் தங்களால் எந்த பிரச்சனையும் வராது எனவும் கூறினார்.

மேலும் முதல்வருக்கு தேவையான சக்திகளையும் தாங்கள் தர தயாராக இருப்பதாகவும் துரைமுருகன் கூறினார். இதனால் அவையில் கலகலப்பு ஏற்பட்டதுடன், சிரிப்பலையும் தொடர்ந்தது. பின்னர் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி, தற்போது எளிமையான முதல்வர் கிடைத்துள்ளதாகவும், சட்டப்பேரவையில் தாங்கள் எதிர்பார்த்த ஜனநாயகம் தற்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலை தொடர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வில் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாராட்டும், புகழாரமும் சூட்டியதால் அவையில் கலகலப்பு ஏற்பட்டது. அதேநேரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை துரைமுருகன் கூறியதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க, அதிமுகவினரும் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக உறுப்பினர் சேகர்பாபு ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக இரு கட்சிகளின் உறுப்பினர்களும் குரல் கொடுத்ததால் அவையில் கடும் அமளி நிலவியது. சிறிது நேர அமளிக்குப் பின், பேரவைத் தலைவர் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்தார்.
-
கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து! ஸ்டாலினை பார்த்த ஆளூர்? எம்பியாக்கும் திருமா? -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
திமுகவிற்கு குட்பையா? தனிச்சின்னத்தில் போட்டியிட துடிப்பது ஏன்? சர்ச்சைக்கு நடுவே விளக்கிய ஜவாஹிருல்லா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications