ஏப்.3ல் விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டம்.. திமுக ஆதரவு
பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப். 3-ஆம் தேதி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது.
சென்னை: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்திருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் கடந்த 15 நாள்களாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இந்நிலையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும்.
விவசாயிகளின் நலன்களுக்காக திமுக குரல் கொடுத்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க மறுப்பு தெரிவிக்கின்றன. எனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றார் ஸ்டாலின்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications