For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு: கருணாநிதி அதிரடி அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்கத்துக்கு மாறாக திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கையை இன்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வாசித்து வெளியிட்டார்.

மதுவிலக்கு தொடர்பான கருணாநிதி அறிக்கை:

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

karunanidhi

தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லாத காரணத்தால், ஏழை, எளிய விவசாயப் பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள், ஏன் மாணவர்களும் கூட தொடர்ந்து , மனம் போன போக்கில் மதுவை அருந்தி, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிறார்கள்.

இந்தக் கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலி ஆகிறார்கள் என்ற செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

எனவே தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக திமுக முன்னணி தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

English summary
DMK leader Karunanidhi wows to bring prohibition if DMK comes back to power on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X