டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டை கையில் எடுக்கும் திமுக.. களமிறங்கும் உதயநிதி.. இன்று ஆர்ப்பாட்டம்!
சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று காலை போராட்டம் நடக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. தேர்வை நடத்திய அதிகாரிகளே இதில் ஈடுப்பட்டு கடந்த வாரம் அம்பலம் ஆனது. இந்த முறைகேடு தொடர்பாக வரிசையாக பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர். இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது.
இதில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீஸார் சிவகங்கை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர் என 5 மாவட்டங்களில் நடத்தி வருகிறார்கள்.
தமிழக அரசுக்கு இந்த ஊழல் பெரிய தலைவலியாக மாறியுள்ளது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் வியாபாம் ஊழலை போல, தமிழ்நாட்டின் வியாபம் என சொல்லும் அளவுக்கு டி.என்.பி.எஸ்.சி மோசடி இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகம் முன் திமுக சார்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று காலை போராட்டம் நடக்க உள்ளது.திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு காலை 10 மணி அளவில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications