வேட்பாளர் நேர்காணலில் ஜாதி குறித்து கேட்ட திமுக.. டிவிட்டரில் போட்டுத்தாக்கிய ராமதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக நேர்க்காணலில் ஜாதிக்குறித்து கேட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இவர்கள்தான் ஜாதியையும் பண பலத்தையும் ஒழிக்கப் போகிறவர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதால் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு பெரிய சவாலாக உள்ளது.

இதில் தேமுதிக ஆர்கே நகரில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து விட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக தானே போட்டியிப்போவதாக அறிவித்துள்ளார்.

திமுக நேர்க்காணல்

திமுக நேர்க்காணல்

ஓபிஎஸ் தரப்பு அதிமுகவும் சசிகலா தரப்பு அதிமுகவும் வேட்பாளர் குறித்து ஆலோசித்து வருகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள திமுக வேட்பாளர் நேர்காணலை நடத்தியது.

உங்கள் ஜாதி என்ன?

இந்த நேர்க்காணலில் வேட்பாளர் தேர்வுக்கு வந்தவர்களிடம் திமுகவினர் என்ன கேள்விகள் கேட்டனர் என்பது குறித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நேர்காணலுக்கு வந்தவர்களிடம் உங்கள் சாதி என்ன? தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்வீர்கள் என திமுக கேட்டதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜாதி மற்றும் பணம் குறித்து மட்டும்

ஜாதி மற்றும் பணம் குறித்து மட்டும்

இதுதான் திமுக கட்ட முக்கிய வினாக்கள் என்றும் ராமதாஸ் பதிவிட்டுள்ளார். ஜாதி குறித்தும், பணம் குறித்தும் மட்டுமே கேட்டுள்ளனர் என்றும் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.

இவர்களா ஒழிக்கப்போகிறார்கள்

மற்றொரு டிவிட்டில் இவர்களா ஜாதியையும், பண பலத்தையும் ஒழிக்கப் போகிறார்கள் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதியும் பணபலமும் ஒழிக்கப்படும் என்று கூறிய திமுக தனது வேட்பாளர்களிடம் ஜாதிக்குறித்து கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Ramadoss tweets in his twitter page DMK was asking candidates who were coming for the interview abot their cast and how much they will spend for the election.
Please Wait while comments are loading...