அழகிரியை சேர்த்துக்கொண்டால் திமுகவுக்குதான் பலம்... சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
அழகிரியை சேர்த்துக்கொண்டால் திமுகவுக்குதான் பலம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: அழகிரியை சேர்த்துக்கொண்டால் திமுகவுக்குதான் பலம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான முக அழகிரி திமுகவில் சேர ஆர்வமாக உள்ளார். ஆனால் திமுக தலைவராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் அவரை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை.
அழகிரி கூறும் எந்த கருத்துக்கும் பதில் கூறாமல் தன்போக்கில் இருந்து வருகிறார் ஸ்டாலின். ஸ்டாலின் தலைமையை ஏற்க தயார் என்று அழகிரி கூறியும் ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் உள்ளார்.

நாஞ்சில் சம்பத்
வரும் 5ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தி தனது பலத்தை நிரூபிக்கும் பணியில் படுபிஸியாக உள்ளார் அழகிரி. இந்நிலையில் திருவாரூரில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்டாலின் கையில் உள்ளது
அப்போது அவர் கூறியதாவது, அழகிரியை சேர்ப்பதன் மூலம் திமுக நிச்சயம் வலிமை பெறும். ஆனால் அவரை கட்சியில் சேர்ப்பது குறித்த முடிவு தலைவர் ஸ்டாலின் கையில்தான் உள்ளது.

திரைத்துறையில் இருப்பவர்கள்..
நிலம், நீர், காற்று இவை மூன்றும் இருக்கும் வரை திராவிடம் நிலைத்திருக்கும். திரைத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் அரசியலில் வெற்றிபெற முடியாது.

ஜொலித்துவிட முடியாது
திரைத்துறையில் ஜொலிப்பவர்கள் எல்லாரும் எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல் ஜொலித்து விட முடியாது. இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications