நீட் தேர்வு ரத்து: திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்- அமைச்சர் பதிலில் திருப்தி இல்லாததால் வெளிநடப்பு!
நீட் தேர்வு ரத்து விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர திமுக திட்டமிட்டுள்ளது.
Recommended Video

சென்னை : நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் திமுக கொண்டு வந்தது. அதற்கு அமைச்சரின் விளக்கம் ஏற்பு இல்லாததால், திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காயிதே மில்லத்தின் 123வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. முன்னதாக, அவரது நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக பாடுபட்ட காயிதே மில்லத்தின் கனவு நினைவாக திமுக தொடர்ந்து பாடுபடும்.
நீட் தேர்வால் தொடர்ந்து தமிழகத்தில் மாணவர்களின் உயிர்கள் காவு வாங்கப்படுவது ஏற்புடையதல்ல. இனியும் எந்த உயிரும் நீட் தேர்வால் பறி போகக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன்படி இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை தொடர்பாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், இன்னும் எத்தனை அனிதா, பிரதீபாக்களை நாம் நீட் தேர்வால் இழக்க போகிறோம்?
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் தெரிவித்த விளக்கத்தை ஏற்காத திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications