திமுகவில் சேர்க்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. அழகிரி எச்சரிக்கை
திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுகவில் தன்னை சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் எதிராக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

இதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வாக இருக்கிறார்கள். இதற்கு இடையில் செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி குறித்து அழகிரி சில திமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். நான்காவது நாளாக உரையாடல் நடத்தும் அவர் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.
அதில், கருணாநிதி இல்லாததால் கட்சியை காப்பாற்ற முடிவெடுத்தேன்.எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தலைவராக கருணாநிதி இருந்த போது என்னை கட்சியில் சேர்க்கும் படி கூறியுள்ளார்.
ஆனால் அப்போது சிலர் அவரை தடுத்து இருக்கிறார்கள். சிலர் அவர் மனதை மாற்றியுள்ளனர். என்னை கட்சியில் சேர்க்க கூடாது என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். கருணாநிதி இருந்த வரை அமைதியாக இருந்தேன்.
இப்போது கட்சி மோசமான நிலைக்கு வந்துவிட்டது. அதை காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களிடம் என்னை கட்சியில் சேர்க்க சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் களமிறங்கியுள்ளேன்.
தொண்டர்களின் வேண்டுகோளுக்காகவே பேரணி நடத்த உள்ளேன். தொண்டர்கள்தான் என்னை பேரணி நடத்தும்படி கூறினார்கள். அவர்கள் கேட்டதால்தான் பேரணியே என்று அழகிரி கூறியுள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications