லோக்சபா தேர்தல்: திமுகவில் 20-ந் தேதி முதல் மார்ச் 3 வரை வேட்பாளர் நேர்காணல்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் நேர்காணலை 20-ந் தேதி முதல் நடத்துகிறது திமுக.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளது திமுக. அந்த கட்சியின் கூட்டணியும் ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் நேர்காணலை அக்கட்சி நடத்துகிறது.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் 20-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறும்.
திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.
எந்தெந்த நாளில் எந்தெந்த தொகுதிகள்...
பிப்ரவரி 20-ல் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும்
பிப்ரவரி 21-ந் தேதி ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 22-ந் தேதி சிவகங்கை, கரூர், தஞ்சை, நாகை, திருச்சி, மயிலாடுதுறைக்கும் நேர்காணல் நடைபெறும்
பிப்ரவரி 23-ந் தேதி பெரம்பலூர், சிதம்பரம், கடலூர், நீலகிரி, பொள்ளாச்சிக்கும் பிப்ரவரி 25-ந் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிக்கும் நேர்காணல் நடடபெறும்.
பிப்ரவரி 27-ந் தேதி சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, பிப் 28ந் தேதி ஆரணி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், மார்ச் 2ந் தேதி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளுக்கும் மார்ச்.3 ந் தேதி வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரிக்கும் நேர்காணல் நடைபெற உள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications