கனிமொழி, ராசாவுக்காக சென்னை விமான நிலையத்தில் குட்டி மேடை!
2ஜி ஊழல் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததை தொடர்ந்து சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு விமான நிலையத்தில் குட்டி மேடை அமைத்து அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை 2ஜி ஊழல் வழக்கில் இருந்து சிபிஐ நீதிமன்றம் விடுவித்ததை தொடர்ந்து சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு விமான நிலையத்தில் குட்டி மேடை அமைத்து அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது சிபிஐ குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தீர்ப்புக்குப் பிறகு இன்று சென்னை வந்த கனிமொழி மற்றும் ஆ ராசாவுக்கு பறையாட்டம், தப்பாட்டம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் கட்சியினரும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவிக்க வசதியாக விமான நிலையத்தில் ஒரு குட்டி மேடை அமைக்கப்பட்டது. இந்த விழா மேடையின் பின்பகுதியில் கருணாநிதியின் போட்டோ மற்றும் அவர் எழுதிய அநீதி வீழும் அறம் வெல்லும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இந்த மேடைக்கு வந்த ஆ ராசா மற்றும் கனிமொழிக்கு தொண்டர்கள் பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்பு தெரிவித்தனர். இதில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications