கருணாநிதி குறித்து இழிவான டிவிட்:திருவள்ளூரில் திமுகவினர் போராட்டம்.. எச் ராஜா கொடும்பாவி எரிப்பு!
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக டிவிட்டியிருந்த எச் ராஜாவைக் கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக டிவிட்டியிருந்த எச் ராஜாவைக் கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் டென்ஷன் ஆன பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா திமுக தலைவர் கருணாநிதி, அவரது துணை ராஜாத்தியம்மாள், அவர்களின் மகள் கனிமொழி ஆகியோர் குறித்து தரக்குறைவாக டிவிட்டியிருந்தார்.

எச் ராஜாவின் இந்த டிவிட்டுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றனர். எச் ராஜாவைக் கண்டித்து நேற்றுமுதல் திமுகவினர் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் எச் ராஜாவுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எச் ராஜாவைக் கண்டித்து முழக்கமிட்ட திமுகவினர் எச் ராஜாவின் கொடும்பாவியையும் எரித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி குறித்த தனது டிவிட்டுக்கு எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் போராட்டம் தீவிரமடையும் என்றும் திமுகவினர் எச்சரித்துள்ளனர்.
-
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
நயினார் தலைக்கு மேல் தொங்குது கத்தி.. ’கணக்கு’ கேட்கும் டெல்லி! கோபத்தில் கண்சிவந்த அமித் ஷா! பரபர -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக் -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன?












Click it and Unblock the Notifications