ஆட்சியை கைப்பற்றுவதில் மட்டுமே இரு கோஷ்டிகளும் மும்முரம்.. ஸ்டாலின் விளாசல்!
ஆட்சியைக் கைப்பற்றுவதில் மட்டுமே அதிமுகவின் இரு கோஷ்டிகளும் ஆர்வம் காட்டி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஆட்சியைக் கைப்பற்றுவதில் மட்டுமே அதிமுகவின் இரு கோஷ்டிகளும் ஆர்வம் காட்டி வருவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பதவியைக் காப்பாற்றவே அமைச்சர்கள் மெனக்கெட்டு வருவதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எல்லையம்மன் கோயில் குளத்தை தூர்வாரும் பணி திமுக சார்பில் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

பதவியை காப்பாற்ற..
அப்போது மக்கள் பிரச்சனைகளை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டினார். பதவியை காப்பாற்றவே அமைச்சர்கள் மெனக்கெடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கோஷ்டிகளை இணைப்பதில்..
பிரிந்து கிடக்கும் அதிமுகவின் இரு கோஷ்டிகளையும் இணைப்பதில்தான் அமைச்சர்களுக்கு அக்கறை என்றும் அவர் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பினாமி அரசு தமிழகத்தில் நடைபெற்று வருவதாகவும் அவர் சாடினார்.

மத்திய அரசிடம் மண்டியிட்டு..
ஊழல் மற்றும் மணல் கொள்ளை ஆகியவற்றில் மட்டுமே அரசு ஆர்வம் காட்டி வருகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். வருமான வரித்துறை சோதனைகளில் இருந்து தப்பவே எடப்பாடி அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசு தவறி விட்டது..
நீர்நிலைகளை பாதுகாக்க அரசு தவறி விட்டதாகவும் அவர் கூறினார். தண்ணீர் சேமிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications