பேரனின் திருமணத்தில் கூட பங்கேற்காமல் காரியத்தில் கண்ணாக இருக்கும் "சின்ன தாத்தா" ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பேரனின் திருமணத்தில் கூட பங்கேற்காத "சின்ன தாத்தா ஸ்டாலின்- வீடியோ

  சென்னை: பேரனின் திருமணத்தில் கூட பங்கேற்காமல் ஸ்டாலின் அரசியல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

  முக.முத்துவின் பேரனும் கருணாநிதியின் கொள்ளுப் பேரனுமான மனுரஞ்சித்திற்கும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.

  இதனை திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் அழகிரி, கனிமொழி, முரசொலி அமிர்தம், முக தமிழரசு, தயாநிதி மாறன், வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  சின்ன தாத்தா பங்கேற்கவில்லை

  சின்ன தாத்தா பங்கேற்கவில்லை

  இதேபோல் நடிகர் விக்ரமின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். ஆனால் மனுரஞ்சித்தின் சின்ன தாத்தாவான ஸ்டாலின் இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை.

  தேவர் நினைவிடத்தில் மரியாதை

  தேவர் நினைவிடத்தில் மரியாதை

  தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு சென்றுள்ளார். அங்குள்ள பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

  சிதறியுள்ள அதிமுக

  சிதறியுள்ள அதிமுக

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சிதறியுள்ளது. அதிமுகவை கைப்பற்ற தினகரன் தரப்பும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பும் போட்டி போட்டு வருகின்றன.

  வாய்ப்பை பயன்படுத்தும் ஸ்டாலின்

  வாய்ப்பை பயன்படுத்தும் ஸ்டாலின்

  இதனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப்பார்க்கிறார் ஸ்டாலின். தமிழக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருகிறார் ஸ்டாலின்.

  பேரனின் திருமணம் இரண்டாம்பட்சம்

  பேரனின் திருமணம் இரண்டாம்பட்சம்

  முக்கிய சமுதாயமாக உள்ள தேவர் சமுதாயத்தின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தனது பேரனின் திருமணத்தை இரண்டாம்பட்சமாக கருதி தேவர் ஜெயந்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஸ்டாலின். ஏற்கனவே நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் அதுபோன்ற மற்றொரு எழுச்சி பயணத்தை அறிவித்திருந்தார்.

  அரசியலே முக்கியம்

  அரசியலே முக்கியம்

  ஆனால் பருவமழைக் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரனின் திருமணத்தை விடவும் அரசியலுக்கும் ஆட்சிக்குமே ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK working president Stalin did not participate in the Grandson marriage. Stalin has gone to Pasumpon for Devar Jayanthi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற