வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஜெ. சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி: ஸ்டாலின்
நாகர்கோவில்: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம் என்று ஜெயலலிதா சொல்லியிருப்பது சிறந்த நகைச்சுவையான செய்தி என திமுக பொருளாளர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாகர்கோவில் அருகே முன்னாள் எம்.பி., சங்கரலிங்கம் மறைந்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றார் திமுக பொருளாளர் ஸ்டாலின். அங்கு சங்கரலிங்கத்தின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது:

ஆட்சிக்கு வந்ததும்...
கருணாநிதி கொடுத்த உறுதிமொழியை திமுக ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றுவோம்.

மக்கள் சொல்லவில்லையே...
தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறியுள்ளது என்று ஜெயலலிதா சொல்லியுள்ளார். ஆனால் மக்கள் சொல்லவில்லை.

கருத்துக்கணிப்புகள்...
கருத்துக்கணிப்பில் திமுகவை பொறுத்த வரை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் வரவேற்க மாட்டோம். விமர்சனமும் செய்ய மாட்டோம். ஒட்டு மொத்தமாக தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார்கள்.

சசிகலா குடும்பத்திற்கு மட்டும்...
இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளியாக்கியுள்ளோம் என்று கூறியுள்ளது தமிழகத்தை அல்ல. அவர்கள் உறவினர்கள் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்குதான் பொருந்தும்.

நகைச்சுவை செய்தி...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று சொல்லியிருப்பது மிகுந்த நகைசுவைக்குரிய செய்தி.

தேர்தல் கூட்டணி...
தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் தெரிவிப்போம். ஹைதராபாத்தில் தலித் மாணவர் சாவுக்கு யார் காரணமோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications