ஆர்எஸ்எஸ் கல்வி அன்று.. திராவிட கல்வி இன்று.. திமுகவின் அதிரடி திட்டத்துக்கு கி.வீரமணி பாராட்டு..!
இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு கி வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்
ஊட்டி: தமிழக அரசு கொண்டுவந்துள்ள இல்லம் தேடிக் கல்வித் திட்டம், திராவிடக் கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தில் "இல்லம் தேடி கல்வி" என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்..
இந்த திட்டம் கொண்டு வரப்பட முக்கிய காரணம், கொரோனா பரவல் சார்ந்த பொதுமுடக்க காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகம்
ஆனாலும் இந்த திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன... மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாகத்தான் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், ஆர்எஸ்எஸ்சின் அஜென்டா இது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த வகையில், திராவிடர் கழக தலைவர் கி வீரமணியும் கருத்து கூறியிருந்தார்..

அவசியம்
"கல்வி திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக்கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம் என்றும், இத்திட்டம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை பரப்பும் திட்டம்" என்றும் விமர்சித்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினே ஒரு விளக்கம் தந்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பாராட்டு
இதையடுத்து, இந்த விளக்கத்தை பல்வேறு தரப்பினரும் ஏற்றுக் கொண்ட நிலையில், விமர்சித்தவர்களும் இந்ததிட்டத்தை பாராட்டி வருகின்றனர்.. அந்த வகையில், கி.வீரமணியும் இதை வரவேற்பதாக கூறியுள்ளார். ஊட்டி அருகே பேராரில் உள்ள தனியார் கட்டிடவியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்றார்.. மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

துணைவேந்தர்
"தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது... தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம், திராவிட கல்வி திட்டம் என்பதில் மகிழ்ச்சி... துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு இருக்கக் கூடாது. தமிழக அரசுக்கு மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் நியமனத்தில் தமிழகத்தின் தன்மானத்தை அதிமுக அரசு அடகு வைத்து விட்டது...
Recommended Video

கொடநாடு
துணைவேந்தர் நியமனத்தில் தற்போதைய தமிழக அரசு தன்மானத்தை மீட்டெடுக்கும்... முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை, பழிவாங்கும் நடவடிக்கை இல்லை... கோடநாடு உட்பட பல்வேறு விவகாரத்தில் பல உண்மைகள் விரைவில் வெளிவரும்" என்றார். சில தினங்களுக்கு முன்பு விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இல்லம் தேடி கல்வி திட்டத்தை கி.வீரமணி வரவேற்றிருப்பது முக்கியத்துவம் பெற்று வருகிறது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications