முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பக் கூடாது.. காவல்துறை எச்சரிக்கை
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து யாரும் வதந்தி பரப்பக் கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பக் கூடாது என்று காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் நுரையீரல் தொற்று நோய்க்கான சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் ஒரு பதற்ற நிலை உருவாகியுள்ளது. மேலும், கடைகள், பெட்ரோல் பங்க்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள் இயக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு போலீசார் அனைவரும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் பதற்றம் நிலவுவதை சாதகமாக்கிக் கொண்டு, முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் சமூக விரோதிகள் யாராவது வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து நகரங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications