உங்க கிட்ட ரேஷன் கார்ட் இருக்கா? உடனே போனை எடுத்து.. இந்த நம்பருக்கு கூப்பிடுங்க.. முக்கியம்
சென்னை: உங்களிடம் ரேஷன் கார்ட் அட்டை இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருந்தபடியே ரேஷன் கடை திறந்து இருக்கிறதா என்று எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.
பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளன.
ரேஷன்: இந்த நிலையில்தான் ரேஷன் கடைகளுக்கு என்று முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. உங்களிடம் ரேஷன் கார்ட் அட்டை இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருந்தபடியே ரேஷன் கடை திறந்து இருக்கிறதா என்று எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.
முன்பெல்லாம் ரேஷன் கடைகள் திறந்து இருக்கிறதா என்று கடைகளுக்கு சென்றுதான் பார்க்க வேண்டும். ரேஷன் கடைகள் செய்லபடுகிறதா இல்லையா என்பதை கடைக்கு சென்று பார்க்க வேண்டும். இனி அப்படி பார்க்க வேண்டியது இல்லை.
இனி வீட்டில் இருந்தபடியே இந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். 9773904050 என்ற நம்பருக்கு PDS 102 என்று குறுஞ்செய்தி அனுப்புங்கள் போதும். ரேஷன் கடை திறந்து உள்ளதா என்று தெரிந்து விடும்.
ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பரில் இருந்து இந்த மெசேஜை அனுப்ப வேண்டும். அதேபோல் 9773904050 என்ற நம்பருக்கு PDS 101 என்று குறுஞ்செய்தி அனுப்பினால் ரேஷனில் என்னென்ன பொருட்கள் விற்பனை ஆகிறது என்ற லிஸ்ட்டும் வந்துவிடும்.
வளர்ச்சி அடையும் ரேஷன் துறை:தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுக்க அமல்படுத்த போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதத்தில் இருந்து எல்லா நகரத்திலும், மாநகரத்திலும் குறைந்தது ஒரு ரேஷன் கடையிலாவது இந்த திட்டம் அமலுக்கு வரும். கடைகளில் ஏற்கனவே பயோமெட்ரிக் உள்ளது.
அதாவது கை ரேகை எடுத்து பொருட்கள் கொடுக்கும் முறை உள்ளது. பயோமெட்ரிக் வேலை செய்யாத சமயங்களிலும், இனி கண் மூலம் பொருட்களை வாங்க முடியும். இந்த புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும்.

கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும். இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. அதேபோல் அரியலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின் இன்னும் சில கிராமங்களில் இதே திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதை தொடர்ச்சியாக வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications