காலி மனையில் கணவனை காலி செய்த மனைவி.. உயிருடன் மண்ணில் இறக்கிய கொடுமை.. தர்மபுரியில் இப்படியொரு பெண்
தர்மபுரி: தகாத உறவுகளும் அது தொடர்பான குற்றங்களும் பெருகி வருகின்றன.. கள்ளக்காதல் அட்டகாசங்களால் இளம் தம்பதிகளின் குடும்பமே சின்னாபின்னமாகி விடுகின்றன... இதனால் அந்த தம்பதிகளின் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுகிறது.. இந்நிலையில், கள்ளக்காதலுக்காக தர்மபுரியில் 8 வருடங்களுக்கு முன்பு நடந்த கொடூரமும், இது தொடர்பான வழக்கின் தற்போதைய தீர்ப்பும், மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
தர்மபுரி நகரை சேர்ந்தவர் ரூபன் கவியரசு.. இவருக்கு 42 வயதாகிறது.. தர்மபுரியிலேயே பைனான்ஸ் நடத்தி வந்தார்... இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தார்.

பிறகு நிர்மலா என்ற என்ஜினியரிங் படித்த பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்... ஆனால், நிர்மலா ஏற்கனவே கல்லூரி படிக்கும்போது அபினேஷ் என்பவரை காதலித்தார்.. ரூபனுடன் 2வது திருமணம் நடந்த பிறகும்கூட, அபினேஷூடனான காதலை நிர்மலா தொடர்ந்து வந்துள்ளார்..
கள்ளக்காதலனை விடாத நிர்மலா
தற்போது ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார் 30 வயது அபினேஷ்.. ஒருகட்டத்தில் நிர்மலாவின் கள்ளக்காதல் ரூபனுக்கு தெரியவந்துள்ளது.. உடனே நிர்மலாவை கண்டித்துள்ளார்.. இது நிர்மலாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து ரூபனை கொன்றுவிடுவதென முடிவு செய்தார். மேலும், 8 பேர் கொண்ட கும்பலை நியமித்து, அவர்கள் மூலம் இந்த கொலையை அரங்கேற்ற திட்டமிட்டார்.
இதற்காக கடந்த 2017 நவம்பர் 14ம் தேதி, ரூபனை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு கடத்தி சென்று, கை, கால்களை கட்டி அடித்து உதைத்துள்ளனர்.. பிறகு, குண்டல்பட்டி தனியார் கல்லூரி அருகேயிருந்த காலி நிலத்தில் கை, கால்களை கட்டிய நிலையிலேயே, குழி தோண்டி உயிருடன் புதைத்திருக்கிறார்கள்..
காலி மனையில் கணவர்
மறுநாள் ரூபனை காணவில்லை என்று அவரது பெற்றோர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் தந்தனர்.. இது தொடர்பாக நிர்மலாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், கூலிப்படையை வைத்து கணவனை உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.
இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், சம்பந்தப்பட்ட காலி மனையில் ரூபன் சடலத்தை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. அப்போது மிக கொடூரமாக ரூபனை அடித்தே துன்புறுத்தி கொன்றதாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியானது.. இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடி உட்பட 10 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அதிரடியாக நீதிபதி தந்த தீர்ப்பு
பிறகு இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டள்ளது.. அதில் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை மூலம் கொலை செய்த நிர்மலா, கள்ளக்காதலன் அபினேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார்.. அத்துடன், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 8 பேரையும் விடுவிக்கும்படியும் உத்தரவிட்டார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு கை, கால்களை கட்டி உயிருடன் புதைத்து கணவரை கொன்ற வழக்கில், கள்ளக்காதலனுடன் மனைவிக்கும் சேர்த்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, தர்மபுரி மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications