தாலிக்கு தங்கத்தை அளித்து அதை டாஸ்மாக் மூலம் பறிக்கும் ஜெ. அரசு: குஷ்பு
திருவண்ணாமலை: தாலிக்கு தங்கத்தை கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் பறிக்கிறார்கள். அப்படி அவர்கள் அளிக்கும் தங்கம் உங்களுக்கு தேவையா? என அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதி காஞ்சி சந்தை திடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

தாலிக்கு தங்கம்
தாலிக்கு தங்கத்தை கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் பறிக்கிறார்கள். அப்படி அவர்கள் அளிக்கும் தங்கம் உங்களுக்கு தேவையா?

என்ன செய்தீர்கள்?
எங்கு சென்றாலும் செய்வீர்களா, செய்வீர்களா என்று மக்களை பார்த்து கேட்டார்கள். கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்களாம்.

வெள்ளம்
மக்களுக்காக வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தீர்களா?. சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் இயற்கை அல்ல செயற்கையானது. அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை.

மாற்றம்
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலில் தான் தவறு செய்துவிட்டோம். இந்த தேர்தலில் அந்த தவறை செய்யக் கூடாது.

காங்கிரஸ்
நாட்டுக்காக ரத்தம் சிந்திய கட்சி காங்கிரஸ் மட்டுமே. அதனால் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச யாருக்கும் தகுதி இல்லை. வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கடன் வாங்கிய விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உதவியுள்ளது. ஆனால் ஒரு டிராக்டருக்காக கடன் வாங்கிய விவசாயி தாக்கப்பட்டுள்ளார்.

பாஜக
பாஜகவும், அதிமுகவும் ஒன்று தான். தேர்தல் நேரத்தில் பணம் கொடுப்பார்கள். அது உங்களுடைய பணம். வரும் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டால் தான் நாட்டையும், பெண்களையும் காப்பாற்ற முடியும்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications