நான் யாருனு தெரியுதா தாத்தா?: உதயநிதி கேள்விக்கு குழந்தை சிரிப்பை பதிலாக தந்த கருணாநிதி
நான் யாரென்று தெரிகிறதா தாத்தா என்று கருணாநிதியை சந்தித்த உதயநிதி கேட்டார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கருணாநிதியிடம் ஆசி வாங்க சென்ற போது உடன் சென்ற உதயநிதி, தாத்தாவிடம் தான் யார் என்று தெரிகிறதா என்று கேட்டதற்கு கருணாநிதி தனது சிரிப்பை பதிலாக அளித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். சமீபத்தில் முரசொலி பவள விழா கண்காட்சியை அந்த அலுவலகத்துக்கு சென்று பார்வையிட்டார்.

அண்ணா அறிவாலயத்துக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். நாளுக்கு நாள் கருணாநிதியின் உடல்நலம் முன்னேறி வருகிறது. இந்நிலையில் நேற்று தனது கொள்ளுபேரனுடன் வீட்டுக்குள்ளேயே பந்தை வீசி கிரிக்கெட் விளையாடினார் கருணாநிதி.
இந்நிலையில் இன்று ஸ்டாலினின் பிறந்த தினத்தையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் சென்றார்.
அங்கு கருணாநிதி மற்றும் தயாளு அம்மாளிடம் ஆசி வழங்கினார். அப்போது அருகிலிருந்த உதயநிதியை காட்டி இவர் யாருனு தெரிகிறதா என்று ஸ்டாலின் கேட்டார். பின்னர் உதயநிதியே தாத்தா நான் யாருனு தெரிகிறதா என்று கேட்டபோது ஸ்டாலின் உதயா என்று கூறியதை கேட்ட கருணாநிதி சிரித்தார்.
பின்னர் நேத்து கிரிக்கெட் விளையாடினீங்களா, நான் வீடியோல பார்த்தேன் என்று உதயநிதி கூறியதற்கு குழந்தை போல் ஒரு சிரிப்பை உதிர்த்தார். அப்போது துர்கா ஸ்டாலின் தான் எழுதிய நானும் அவரும் புத்தகத்தை கருணாநிதியிடம் கொடுத்து ஆசி வாங்கினார். புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications