அப்பல்லோவில் வேலை பார்த்தாக கூறி ஜெ. சிகிச்சை பற்றி சர்ச்சை கருத்து..சீதாவுக்கு மார்ச் 10 வரை சிறை
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து கருத்து தெரிவித்த சீதா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். அவரை மார்ச் 10 வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது, அங்கு டாக்டராக பணியாற்றியதாக சீதா என்பவர் கூறி வந்தார். ஜெயலலிதா மறைவையடுத்து, சில சர்ச்சையான கருத்துக்களை அவர் கூறியிருந்தார். இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், சீதாவை இன்று கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவருக்கு மார்ச் 10 வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக சீதா, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து இதுகுறித்து கருத்துகளை பகிர்ந்திருந்தார். அதேபோல முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து ஜெயலலிதா அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டபோது எந்த நிலையில் வந்தார் என்பது குறித்த சில தகவல்களை தெரிவித்திருந்தார்.
நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவை சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது இருந்த சூழல் குறித்து சில சர்ச்சைக்குறிய கருத்துக்களை அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவுடன் ரத்த உறவினர்கள் யாரும் வரவில்லை. அவருடன் தங்கும் நிலையில் யாரும் வரவில்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. டாக்டர்களைக் கூட அனுமதிக்கவில்லை. இதில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியும் என்றும் சீதா கூறியிருந்தார். இந்நிலையில் அவர் இன்று கதைு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீதா என்பவர் மருத்துவர் கிடையாது. நியூட்ரிஷியன் படித்து வேலை பார்த்து வந்தார். அவர் அப்பல்லோவில் எந்த பதவியிலும் வேலை பார்த்ததே கிடையாது. பொய் கூறி திரிந்ததால் போலீசில் புகார் கொடுத்தோம் என கூறப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications