தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் இன்று 12 மணி நேர நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப காலமாக, தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதற்காக மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இது ஜனநாயக மரபுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது என்றும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்படுவது ஏழை மாணவர்களை பாதிக்கும் என்றும் கூறி இந்திய மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே இதனை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தினர். ஆனால் பேச்சுவார்ததை தோல்வி அடைந்ததை அடுத்தும், மத்திய அரசு இவ்விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அச்சங்கத்தினர் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பிரசவம், உள் நோயாளிகள் சிகிச்சை, அவசர சிகிச்சை தவிர மற்ற புறநோயாளிகள் சிகிச்சை, அவசரமில்லா அறுவை சிகிச்சை பணிகளில் தொடர்ந்து மருத்துவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இன்று நடத்தும் இந்த 12 மணி நேர வேறுத்தம் ஒரு அடையாள போராட்டம்தான் என்றும் மத்திய அரசின் மனதை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications