தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றில் பாய்ந்த 2 குண்டுகள் ஆபரேஷன் மூலம் அகற்றம்

பல அரசியல் கொலைகளில் தொடர்புடைய தீவிரவாதி போலீஸ் பக்ருதீனின் கூட்டாளியான பன்னா இஸ்மாயில் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தான். அப்போது நடைபெற்றத் துப்பாக்கிச் சண்டையில் பன்னா இஸ்மாயில் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதனால் அவன் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.
தொடர்ந்து இரவு பகலாக மருத்துவர்கள் பன்னா இஸ்மாயிலுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அவனது வயிற்றில் பாய்ந்த இரு துப்பாக்கிக் குண்டுகள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.
இதனால், பன்னா இஸ்மாயிலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக்வும், விரைவில் தீவிரவாத கும்பலின் சதி செயல் திட்டம் குறித்த முழுத் தகவல்களையும் குறித்து அவனிடம் விசாரணை மேற்கொள்ள இயலும் எனவும் போலீசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications