சமையல்காரர் பெயரில் நிறுவனம் நடத்தி சேகர் ரெட்டியுடன் கூட்டணி வைத்த விஜயபாஸ்கர்.. திடுக் தகவல்!

சமையல்காரர் பெயரில் ப்ளூமெட்டல் என்ற நிறுவனம் நடத்தியவர் விஜயபாஸ்கர் என்று வருமானவரித் துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சமையல்காரர் பெயரில் ப்ளூமெட்டல் நிறுவனம் நடத்தி இருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமானத் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினார்கள். அதில் பல்வேறு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Documents expose Health Minister Vijayabaskar

இந்த ஆவணங்கள் மூலம் சில திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது, அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், மணல் மாஃபியா சேகர் ரெட்டிக்கும் இடையில் உள்ள தொடர்பும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் சமையல்காரர் பெயரில் ப்ளூமெட்டல் என்ற பெயரில் நிறுவனம் நடத்தியதும் தற்போது அம்பலமாகியுள்ளது. மேலும், ராசி ப்ளூமெட்டல் நிறுவனத்தைச் சமையல்காரர் சுப்பையா பெயரில் நடத்தியுள்ளதும், அந்த நிறுவனமும் சேகர் ரெட்டி நடத்தி வரும் நிறுவனமும் எப்படி தொடர்பு வைத்துக் கொண்டிருந்தது என்பதும், அதன் மூலம் எவ்வாறு பணமாற்றம் நடந்துள்ளது என்பது பற்றியும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+