டாப் 2.. "ஓங்கியடித்த" பாஜக.. எடப்பாடி எதிர்பாக்கல.. அதிமுக தனித்து போட்டி? 3வது அணி? ஒன்னுமே புரியல
சென்னை: கர்நாடக தேர்தலில் சீட் கேட்டு வரும் அதிமுக, நாளைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது.. இது மிகுந்த எதிர்பார்ப்பை எகிறி வைத்து வருகிறது.
அதிமுக - பாஜக கூட்டணி தொடருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தியிருந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடியும் அதையே உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால், நேற்றுமுன்தினம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, "மெகா கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறும்" என்று கூறியிருந்தது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.

ராயப்பேட்டை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி அதாவது நாளைய தினம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது... சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது.. இந்த கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பூத் கமிட்டி அமைப்பது, கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது, முகவர்களை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.. 3 நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழு கூட்டத்தில், அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடத்தப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. அதேபோல, திமுகவுக்கு எதிரான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அடுத்த மா.செ.கூட்டம் பற்றின அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது...
அமித்ஷா கட்டாயம்: அநேகமாக கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுவதாக தெரிகிறது.. கர்நாடகத்தில் அதிமுகவுக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.. இந்த ஆதரவு பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது.. இப்போதைக்கு தென் மாநிலங்களில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான்.. அதனால், கர்நாடகாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக உள்ளதால், அதிமுகவின் ஆதரவை கேட்டு வருகிறது.. அதிலும் அதிமுக பெரும்பாலும், எடப்பாடியிடம் உள்ளதால், அவரிடமே அமித்ஷா பேசியதாக தெரிகிறது.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜவுக்கு ஆதரவு தருவதை பற்றி எதுவுமே சொல்லாமல், அதிமுகவுக்கும் சீட் தரவேண்டும் என்று கேட்டு வந்தார்.. பிரதமர் மோடி சென்னை வந்தபோதே, இதுகுறித்து அவரிடம் பேசுவதாக எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டது.. ஒருவேளை, பிரதமருடனான சந்திப்பு நடக்காமல் போனால், தங்கள் கோரிக்கையை மனுவாக தந்துவிடலாம் என்றுகூட யோசிக்கப்பட்டது.. எனினும், கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு 3 சீட் தரவேண்டும் என்று அப்போதே கேட்க திட்டமிட்டிருந்தாராம் எடப்பாடி பழனிசாமி
3 சீட்: எனினும், கர்நாடக தமிழர்களிடம் அதிமுகவுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்ற புள்ளைவிபரங்களை பாஜக மேலிடம் தெரிந்து வைத்திருப்பதால், "இந்த முறை நீங்கள் போட்டியிட வேண்டாம். பாஜவை ஆதரியுங்கள்" என்று மட்டும் அதிமுகவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதன்படியே, 3 முதல் 5 சீட் வரை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டு வருகிறார்.. ஆனால், பாஜகவினருக்கே சீட் கொடுக்க முடியாமல் திணறி வரும்நிலையில், அதிமுகவுக்கு சீட் எப்படி கொடுப்பது என்று மேலிடம் திகைத்தது.. எனவே, ஆதரவு மட்டுமே வேண்டும் என்று அதிமுகவிடம் சொல்லிவிட்டது..

பாஜக மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 210 தொகுதிக்கு வேட்பாளரை ஏற்கனவே அறிவித்திருந்தது... நேற்றிரவு 10 தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து விட்டது. அப்படியானால் மீதமுள்ள 2 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.. ஆக, இதனால் அதிமுகவுக்கு சீட் இல்லை என்பது தற்போது உறுதியாகிவிட்டது.. கர்நாடகாவை பொறுத்தவரை 15 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக இருப்பதால்தான், இங்குமட்டும் அதிமுகவின் ஆதரவு தேவை என்று பாஜக மேலிடம் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டு கொண்டு வருகிறது.. எனினும், எடப்பாடி இதவரை பதில் சொல்லாமல் உள்ளார்..
க்ளைமேக்ஸ்: இதனிடையே, கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிட போவதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட்டில் அதிமுக வழக்கும் தொடர்ந்துள்ளது.. இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் நாளை தன்னுடைய முடிவை அறிவிக்க உள்ளது.. ஆனால் வேட்பு மனு தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாளாகும்... அன்று தேர்தல் ஆணையம் தன்னுடைய முடிவை சொன்னாலும், அதிமுகவால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது... இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி குழப்பத்தில் உள்ளார்.
இத்தனைக்கும் பெங்களூரு மாநகராட்சியில் அதிமுகவுக்கு 9 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள்.. அப்படி இருந்தும் பாஜக சீட் தராமல் கைவிரித்துவிட்டதால், எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் உள்ளாராம்.. நாளைதான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும் எடப்பாடி நடத்த உள்ளதால், பாஜக கூட்டணியில் இடம்பெறுவதா? தனித்து போட்டியா என்பது குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்க உள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பு எகிறி கொண்டிருக்கிறது.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications