Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெஞ்சி கெஞ்சி கேட்ட திமுக அமைச்சர்.. "தலைவரே, என்னை மாத்திடாதீங்க".. ஸ்டாலின் "டிக்கடித்தது" இவரையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் ஏற்பட போகிறது.. இதைத்தான் தமிழகம் நாளைய தினம் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளது.. இந்நிலையில், அதுகுறித்து சில தகவல்கள், நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன..!!

தமிழக அரசியலே பரபரத்து காணப்படுகிறது.. அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்... அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளைய தினம் பதவியேற்க உள்ளார்..

ஸ்டாலின் அதிரடி: இப்படிப்பட்ட சூழலில், மேலும் 5 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. 10 ஆண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்ந்துள்ளது திமுக.. அன்று அமைச்சரவை உருவானபோதே, மிகுந்த கண்டிப்புடன் சில விஷயங்களை தன் அமைச்சர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். முக்கியமாக, கண்டிப்பு + கறார் கலந்த அறிவுரைகளை அமைச்சர்களுக்கு தந்திருந்தார்.

Does MK Stalin change the tamil nadu cabinet and What is the list with Chief Minister stalin: 5 portfolios of ministers

யார்மீது புகார் வந்தாலும்சரி, அதன் உறுதித்தன்மை ஆராயப்பட்டு, புகாரும் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியையும் பறிக்க தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனாலும் இந்த 2 வருட கால ஆட்சியில் நிறைய சர்ச்சைகள் கிளம்பின.. சில மூத்த அமைச்சர்களின் சர்ச்சை பேட்டிகளை வைத்து, எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்தன. ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் பொறுமை காத்தார். யாரையும் பதவி பறிப்பு செய்யவில்லை..

புது லிஸ்ட் எங்கே?: எனினும், கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டன.. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றபோது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது.. அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35-ஆக உயர்ந்தது. 234 எம்எல்ஏக்கள் கொண்ட சட்டசபையில் இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது என்பதால் யாரையாவது நீக்கினால்தான் புதிய அமைச்சரை நியமிக்க முடியும் என்ற நிலையும் இருந்தது.

இந்த நிலையில்தான் ஆவடி நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஆர்பி ராஜா திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச்செயலாளராக இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்துறை இலாகா அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மேலும் 5 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்படும் என்று தகவல்கள் பரபரக்கின்றன. அது தொடர்பாக அவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்தும் யூகமான செய்திகள் வலம்வருகின்றன.

Does MK Stalin change the tamil nadu cabinet and What is the list with Chief Minister stalin: 5 portfolios of ministers

சுற்றுலாத்துறை : அந்தவகையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பால்வளத்துறை அல்லது சுற்றுலாத்துறை இலாகா கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.. அதேபோல சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள்.

ஒருவேளை, அமைச்சர் பெரியசாமிக்கு வருவாய்த்துறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி அவர் மாற்றப்பட்டால் அவரிடம் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.. ஆனால், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமரசம் ஆகிவிட்டதால் அவரது இலாகாவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.

யார் அந்த 5 அமைச்சர்கள்: இப்படி யூகங்கள் கிளம்பி கொண்டிருக்கும்சூழலில், ஒரு முக்கிய தகவல் நம்முடைய ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷலாக கிடைத்துள்ளது.. அதாவது, நாளை பதவியேற்பிற்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது. வெளியூரில் இருக்கும் அமைச்சர்கள் எல்லோரையும் சென்னைக்கு வருமாறு நேற்றே அறிவாலயத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டுவிட்டது. அமைச்சரவை மாற்றத்தோடு சில அமைச்சர்களின் இலாகாவை மாற்றியமைக்கவும் முடிவு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

Does MK Stalin change the tamil nadu cabinet and What is the list with Chief Minister stalin: 5 portfolios of ministers

யாருடைய இலாகாவை மாற்ற நினைக்கிறாரோ அந்த அமைச்சரை தொடர்புகொண்டு, " உங்கள் இலாகாவை மாற்றுகிறேன். நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவர்களோ, "அந்த துறை வேண்டாம் தலைவரே ! வேறு துறை கொடுங்கள். இல்லைன்னா... இருக்கும் துறையிலேயே இருக்க அனுமதியுங்கள் " என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்களாம்.

கெஞ்சி கெஞ்சி கேட்டார்: அதிலும் ஒரு சீனியர் அமைச்சர் ஒருவர், "என்னை மாத்தினீங்கன்னா, எனக்கு சுத்தமா மரியாதையே இல்லாம போய்டும். தயவுசெய்து மாத்திடாதீங்க " என்று அழாத குறையாக கேட்டுக் கொண்டாராம்.

சஸ்பென்ஸ்: குறிப்பாக நிதித்துறையை ஏற்க எந்த அமைச்சரும் முன்வரவில்லை என்கிறார்கள்.. இதனால் இலாகா மாற்றத்தை அடித்து அடித்து பல முறை திருத்தி, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்த லிஸ்ட்டை வைத்துதான், இன்று அமைச்சர்களிடம் விவாதிக்கவிருக்கிறார். அதேசமயம், நாளை வரை இலாகா மாற்றத்தின் விபரங்கள் எதுவும் பத்திரிகைகளில் கசிந்து விடாமல் பாதுகாக்கிறாராம் ஸ்டாலின். என்னதான் நடக்கிறது என்று தெரியவில்லை.. ஒரே சஸ்பென்ஸாக இருக்கிறது.. எதுவானாலும் நாளை நமக்கு தெரிந்துவிடும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+