சென்னை பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதா? ... பலாத்காரத்தை தடுக்கப் போனவரின் நேரடி அனுபவம்
சென்னை: சென்னை ஆலந்தூர் பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய 3 பேர் முயற்சித்ததைப் பார்த்து உதவி செய்ய சென்றவரின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொல்ல முயற்சித்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கபாலி படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தபோது அந்தப் பெண்ணுக்கும், தனக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வசந்த் பால் என்பவர் போட்டோ உடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் தனது பதிவில் கூறியுள்ள தகவல்கள் பரபரப்பையும், பலத்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வசந்த் பால் தனது பேஸ்புக் பதிவில் விவரித்துள்ளதாவது:

எனது உடலில் காயங்கள்
எனது உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று கழுத்தில் ஏற்பட்ட காயம் எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்று எனக்கு ஒரு அற்புதமான நாளாக அமைந்தது. வெள்ளிக்கிழமை இரவு கபாலி படம் பார்த்துவிட்டு, தி.நகரில் உள்ள நண்பர்களை சந்தித்து பின்னர் இரவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தேன்.

ஆலந்தூர் பாலம் அருகே
ஆலந்தூர் பாலம் அருகே செல்லும்போது புகை பிடிப்பதற்கு நின்றேன். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. பார்த்தால், ஒரு பெண்ணை போதையில் இருந்த மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்கு சென்றேன். அப்போது அவர்கள் மூன்று பேரும் என்னுடைய கழுத்தை சணல் கயிற்றால் நெறுக்கினர்.

ஆட்டோக்காரர் ஓடி வந்தார்
நானும், அந்தப் பெண்ணும் அலறிய சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற ஆட்டோக்காரர் ஒருவர் ஓடி வந்தார். உடனே அவர்கள் மூன்று பேரும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டனர். அவர்கள் கழுத்தை நெரித்ததில் எனக்கு பயங்கர காயம் ஏற்பட்டது. அந்தப் பெண் கேட்டுக் கொண்டதால் போலீசில் புகார் அளிக்கவில்லை.

போலீஸ் இல்லை
இரவு ரோந்தில் போலீசார் இருப்பார்கள் அவர்களிடம் இதுகுறித்து கூறலாம் என்று அங்கு தேடினேன். ஆனால், எங்கேயும் போலீசார் இல்லை. போலீசில் முறையாக புகார் கொடுக்காவிட்டாலும், போலீசாரிடம் இந்தத் தகவலைக் கூறலாம் என்று பார்த்தால் யாரும் இல்லை. சென்னை பாதுகாப்பற்ற நகரமாக சென்று கொண்டு இருக்கிறது என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தைரியமாக இருங்கள்
எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர் கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வசந்த் பால் ஒரு புகைப்படக்காரர் என்பதால் தனது கழுத்தை கயிற்றால் நெரித்த போது ஏற்பட்ட காயத்தையும் புகைப்படமாக எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ஓலா கேப் அனுபவம்
கடந்த வாரம் ஓலா கேப்பில் தனியாக சென்ற பெண் ஒருவருக்கு நேர்ந்த அனுபவத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். இப்போது வசந்த் பால் என்பவர் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளார். சுவாதி கொலை சம்பவத்திற்குப் பின்னர் பல இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று கூறிய போலீசார் இன்னமும் ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications