நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்... என் மீது பழிபோடப்படுகிறதா என தெரியாது - ஆளுநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பேராசிரியை ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு

  சென்னை: நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.
  அரசியலுக்காக எனக்கு எதிராக பழிபோடப்படுகிறதா என தெரியாது என்றும், எனக்கு எதிரான பாலியல் புகார் பற்றி  உள்துறை அமைச்சகம் விசாரித்ததாக கூறுவது நான்சென்ஸ் என்றும் தெரிவித்தார்.

  பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழி நடத்தினார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு ஆளுநர் லெவலில் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் பேசிய ஆடியோ பலரையும் ஆளுநரின் பக்கம் சந்தேகத்தை திருப்பியது. இந்த நிலையில் நிர்மலா தேவி விவகாரம் பற்றி செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்.

  Dont linking me with Arupukottai college sex scandal says Governor

  நிர்மலா தேவியை தான் பார்த்ததே என்று கூறிய ஆளுநர், ஒரு நபர் விசாரணை அறிக்கை 15 நாட்களில் வெளியாகும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.

  பேராசிரியை நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது தான் என்று ஒரு நபர் விசாரணை கமிஷன் குழுவை தாம் அமைத்துள்ளதாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் விசாரணை முடிந்து அறிக்கை அளிப்பார் அதிகாரிகள் என்று ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

  யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தற்போதைக்கு தேவையில்லை என்றும் தேவைப்பட்டால் அமைக்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

  பல்கலைக்கழக விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. தம்மை கலந்து ஆலோசிக்காமல் விசாரணைக் கமிஷனை அமைத்து விட்டனர் என்று கூறிய ஆளுநர், விசாரணை அதிகாரி தேவைப்பட்டால் பெண் அதிகாரி உதவியோடு விசாரணை நடத்த முடியும். விசாரணை கமிட்டிக்கு கூடுதலாக பெண் ஒருவரை நியமிக்க அவசியம் இல்லை என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TamilNadu Governor Banwarilal Purohit met the press this evening.I am 78 year old. I have a grandson and even great grandson, don't linking me with Arupukottai college sex scandal said governor Banwarilal Purohit.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற