மரணத்திற்குப்பின்னும் சுவாதியை களங்கப்படுத்த வேண்டாம்: தந்தை உருக்கம்
சென்னை: மகளின் கோர மரணம் கண்ணை விட்டு அகலவில்லை. மரணத்திற்குப் பின்னர் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அவரது தந்தை கே.சந்தான கோபால கிருஷ்ணன் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை சூளைமேடு கங்கை யம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளம்பெண் சுவாதி,24, மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர்.
அலுவலகத்துக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணி அளவில் வந்த இவர், மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது சென்னை மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலையாளி இவரா?
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட்டுள்ளது. ரயில்வே போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காதல் பிரச்சினையா?
சுவாதி வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்தார் என்றும், ஒரு தலைக்காதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு கூறுவதாக ஊடகங்களில் செய்திகளில் வெளியாகி வருகின்றன.

களங்கம் வேண்டாம்
சுவாதியின் மரணத்திற்கு பின்னர் இதுபோன்று வெளியாகும் தகவல்கள்தான் அவரது குடும்பத்தினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

கொலைக்கான பின்னணி
சுவாதியின் கொலையின் பின்னணி குறித்து ஊடகங்களில் வதந்திகளை எழுதி அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தங்கள் குடும்பம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நடத்தை படுகொலை
சுவாதியின் உயிரை இனி யாரும் கொண்டு வரப்போவதில்லை. பிறகு ஏன் அவளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும், நடத்தையைப் படுகொலை செய்ய வேண்டும்?" என்றும் சுவாதியின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

குற்றம் நடந்தது என்ன?
பட்டப்பகலில் நடந்த ஒரு கொலை, அந்த கொலைக்கான காரணம், கொலையாளி யார் என்று இதுவரை தெரியாத நிலையில் கொலைக்கான பின்னணி இதுவாக இருக்கலாம், அதுவாக இருக்கலாம் என்று கற்பனை செய்து எழுதுவதை இனியாவது செய்திகள் எழுதுவதை நிறுத்த வேண்டும் என்று சுவாதியின் உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications