இன்னொரு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்திவிடாதீர்கள் - ஸ்டாலின் எச்சரிக்கை
இந்தியாவில் இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசை ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
சென்னை: இந்தி திணிப்பு, மாட்டிறைச்சி என கலகம் செய்கின்றனர். மாட்டிறைச்சியை வைத்து கலகம் செய்கிறார்கள் இந்தியாவில் இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் என்று மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா, சட்டசபை வைரவிழா ராயப்பேட்டையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் பேசிய ஸ்டாலின், தலைவர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின், மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார்.

மிகப்பெரிய சவால்
இந்திய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.கொள்கையில் இருந்து என்றுமே பின்வாங்காதவர் கருணாநிதி மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க ஒன்று சேர்வோம்.

இந்தியை எதிர்க்கவில்லை
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இந்தியை எதிர்த்திருந்தால் பீஹாரில் இருந்து நிதிஷ்குமாரை இந்த விழாவிற்கு வரவழைத்திருப்போமா.

காவிமயமாக்குவதா?
நாட்டை காவிமயமாக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருகிறது. மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் திமுக தலையாட்டாது. இந்தி திணிப்போடு இப்போது மாட்டுக்கறி தடையை கையில் எடுத்துள்ளது.

இன்னொரு சுதந்திர போராட்டம்
இந்தியாவில் இன்னொரு சுதந்திர போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் சுதந்திர போரட்டத்திற்கு தயாராகி விட்டோம் என காட்டத்தான் இந்த கூட்டம் என ஸ்டாலின் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications