காவிரியில் நமது உரி்மையை விட்டுத் தரக் கூடாது.. அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
சென்னை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கத்தக்க ஒன்றுதான். அதேசமயம், காவிரியில் நமது உரிமையை நாம் விட்டுத் தரக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் நேற்று உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதற்கு அரசியல் கட்சியினர் கலவையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸும் இது தொடர்பாக அறிக்கை விட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசுக்கு ஆணை
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக இன்று முதல் காவிரியில் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, காவிரி நீர்ப்பகிர்வு குறித்து இப்போது ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக இரு மாநிலங்களின் முதல்வர்களை அழைத்து பேசும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

மீண்டும் பேசுவதால் என்ன பயன்
காவிரி சிக்கலில் நடுவர் மன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி விட்ட நிலையில், அதை நடைமுறை படுத்துவது தான் இயல்பானதாகவும், சரியானதாகவும் இருக்க முடியும். மாறாக மீண்டும் பேச்சு நடத்தினால் அது காவிரி பிரச்சினையை 25 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஆபத்து உள்ளது. அதனால் தான் காவிரி பிரச்சினை குறித்து கர்நாடகத்துடன் எந்த பேச்சும் நடத்தக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சுப்ரீம் கோர்ட் சொல்வதைக் கேட்போம்
எனினும், காவிரி பிரச்சினை பற்றி இரு மாநில அரசுகளையும் அழைத்து பேசும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், அதை ஏற்று பேச்சு நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதை உணர்ந்து டெல்லியில் நாளை நடைபெறும் பேச்சுக்களில் தமிழகம் பங்கேற்கவிருப்பது சரியானதாகும்.அதே நேரத்தில் இந்த பேச்சுக்களால் எந்தவித பின்னடைவும் ஏற்படாத வகையில் தமிழக அரசு எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும்.

கூட்டாட்சியைக் காக்கும் நோக்கம்
காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு அதன் நோக்கத்தை தெளிவாக தெரிவித்திருக்கிறது. காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்தும்படி நாங்கள் கூறுவதற்கு காரணம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தவும், அதை சம்பந்தப்பட்ட மாநிலங்களை செயல்படுத்த வைக்கவும் நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்பதால் அல்ல. மாறாக கூட்டு ஜனநாயக உணர்வின் அடிப்படையில் இரு மாநில முதலமைச்சர்களும், பிரதமரும் தங்களுக்கிடையிலான சிக்கலை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தான் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கர்நாடக அடாவடியை நீதிபதிகள் உணர்ந்துள்ளனர்
அந்த வகையில் காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தையும், கர்நாடக அரசு செய்து வரும் அடாவடிகளையும் நன்றாக உணர்ந்துள்ள நீதிபதிகள், இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிப்பதற்கு முன் கடைசி வாய்ப்பாக இப்பேச்சுக்களை நடத்த ஆணையிட்டிருப்பதாகவே தோன்றுகிறது. கடந்த காலங்களிலும் இதேபோன்ற வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி காவிரி பிரச்சினை பற்றி 06.01.1997 அன்று அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரும், கர்நாடக முதலமைச்சர் ஜெ.எச்.படேலும் பேச்சு நடத்தினார்கள்.

தமிழகத்திற்கே சாதகம்
அதேபோல், முல்லைப் பெரியாறு சிக்கல் பற்றி 29.11.2006 அன்று புதுதில்லியில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞரும், கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் பேச்சு நடத்தினர். இந்த 2 பேச்சுக்களிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும், தமிழகத்தின் பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு சாதகமாகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, நாளைய பேச்சுக்களின் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை ஆதாரங்களுடன் தமிழக அரசுக் குழுவினர் வலியுறுத்த வேண்டும்.

மேலாண்மை வாரியம் அவசியம்
உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்றம் ஆணையிட்டவாறு காவிரியில் வினாடிக்கு 6000 கனஅடி வீதம் அடுத்த 3 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசுத் தரப்பு ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 4 அணைகளுக்கும் நேற்று இரவு நிலவரப்படி வினாடிக்கு 10,879 கன அடி தண்ணீர் வருவதையும், அணைகளின் நீர் இருப்பு கடந்த ஒரு வாரத்தில் 5 டி.எம்.சி. உயர்ந்து 30.53 டி.எம்.சி.யாக அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டி தமிழகத்திற்கான தண்ணீர் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

உரிமைகளை விட்டு விடக் கூடாது
அதேநேரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்க்கும் எந்த முடிவுக்கும் தமிழக அரசு ஒப்புக் கொள்ளக்கூடாது. அது போராடிப் பெற்ற நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உள்ளிட்ட உரிமைகளை பறித்துவிடும் என்பதால் இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசும், காவிரி ஆணையத்தை இனியும் தாமதமின்றி அமைக்க மத்திய அரசும் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications