நீட் விலக்கு கிடைக்கும் வரை அமைச்சர்கள் வாயே திறக்காதீங்க - நீதிபதி கிருபாகரன்
நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை அமைச்சர்கள் பேட்டி எதுவும் தராமல் அமைதி காப்பது நல்லது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் வரை அமைச்சர்கள் எந்த விதமான பேட்டியும் கொடுக்காமல் இருப்பது நல்லது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளர்.
நீட் தேர்வு மற்றும் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனங்களை முன் வைத்தார்.

நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று பேசிப் பேசியே ஒரு உயிரை இழந்துவிட்டோம். இனிமேல், நீட் தேர்வில் விலக்குக் கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எந்த பேட்டியும் கொடுக்காதீர்கள்.
பயிற்சி மையங்கள்
நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களை அடுத்த ஆண்டு தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக பயற்சி மையங்கள் அமைக்கப்பட்டனவா?
நம்பிக்கை துரோகம்
மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அரசு ஒரு மணி நேரம் கூட போதுமே என்றும் நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். மாணவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும் நீதிபதி கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
வறுத்து எடுத்த நீதிபதி
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்த கட்சிகள், அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கு குரல் கொடுக்காதது ஏன்?
நடவடிக்கை இல்லையே
நீதிமன்ற உத்தரவை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? போராட்டத்தின் போது மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
நடவடிக்கை பாயும்
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறையை விமர்சிப்பது சரியல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், சமூக வலைத்தளங்களில் நீதிமன்றத்தை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வறிக்கை தாக்கல்
இதன்படி, அக்டோபர் 4ஆம் தேதி தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
-
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications