டாக்டர் அப்துல் கலாம் இறுதிச் சடங்கு
-கலாம் அடக்கம் செய்யப்பட்ட கபர் அருகே குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை
-அப்துல் கலாமுக்கு பாதுகாப்புப் படையினர் இறுதி இசை அஞ்சலி
-மக்களின் ஜனாதிபதி மக்களிடம் இருந்து இறுதி விடைபெற்றார்
-மகத்தான மாமனிதரை மண்ணுக்குள் விதைத்தோம்...
-ஆயிரக்கணக்கான மக்கள் அப்துல் கலாம் வாழ்க கோஷம்
-ஏராளமானோர் கண்ணீருடன் கலாமை வாழ்த்து கோஷம்
-டாக்டர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம்
-21 குண்டுகள் முழங்க கலாமுக்கு பாதுகாப்புப் படையினர் பிரியாவிடை
-கலாமின் உடல் முப்படை வீரர்களால் தூக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பு
-கலாமின் குடும்ப உறுப்பினர்கள் துவா ஓதி பிரார்த்தனை
-அப்துல் கலாம் உடலுக்கு முப்படையினர் இறுதி மரியாதை செலுத்தினர்
-இஸ்ரோ, டிஆர்டிஓ அதிகாரிகள் கலாமுக்கு இறுதி அஞ்சலி
-கலாமின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றம்
-தேசியக் கொடியை முப்படை வீரர்கள் 6 பேர் ராணுவ மரியாதையுடன் எடுத்துச் சென்றனர்
-இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்தது
-சிறிது நேரத்தில் அப்துல் கலாம் உடல் அடக்கம்
-அரசியல் தலைவர்கள் அமர்ந்த மேடையை தவிர்த்து கலாம் குடும்பத்தினருடன் வைகோ
-பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா அஞ்சலி
-வைகோ மலர் தூவி கலாமுக்கு இறுதி அஞ்சலி
-விஜய்காந்த், பிரேமலதா, சுதீஷ் மலர் தூவி அஞ்சலி
-அன்புமணி, ஜி.கே.மணி அப்துல் கலாமுக்கு அஞ்சலி
-இளங்கோவன், திருநாவுக்கரசர், வாசன், திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி
-கேரள முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி
-வரிசையில் நின்று ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி
-குலாம்நபி ஆசாத், ஷானவாஸ் ஹூசேன் பாத்திஹா ஓதி அஞ்சலி
-ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா அஞ்சலி
-முப்படைத் தளபதிகளும் கலாம் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி
-காங். துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலாமுக்கு இறுதி வணக்கம்
-அப்துல் கலாம் உடலுக்கு கவர்னர் ரோசைய்யா, பாதுகாப்பு அமைச்சர் பரிக்கர் மலர் தூவி அஞ்சலி
-அமைச்சர் பன்னீர்செல்வமும் மலர் தூவி அஞ்சலி
-ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சர்கள் கலாம் உடலுக்கு இறுதி வணக்கம்
-கலாமின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி
-அப்துல் கலாம் உடலை கும்பிட்டபடி வலம் வந்தார் மோடி
-அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டது கலாமின் உடல்
-இரு நிமிடம் மெளன அஞ்சலி அனுசரிப்பு
-முப்படை வீரர்கள் கலாமின் உடலை அடக்க ஸ்தலத்துக்கு ஏந்தி வருகின்றனர்
-கலாமின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
-பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று இறுதி வணக்கம் செலுத்தினர்
-பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி வணக்கம் செலுத்தி மக்கள் ஜனாதிபதிக்கு இறுதி விடை அளித்தனர்
-கலாம் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும் பேக்கரும்பு கிராமத்துக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்
-மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் புகழுடலுக்கு முப்படையினர் இறுதி ராணுவ மரியாதை செலுத்தினர்
-இன்னும் சற்று நேரத்தில் மக்கள் ஜனாதிபதி அப்ல்துல் கலாமின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது
-முப்படை அணிவகுப்புடன் கலாம் புகழுடல் ராணுவ வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டது
-பேக்கரும்பில் மக்கள் ஜனாதிபதி கலாமின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது
-தேசியக் கொடி போர்த்தப்பட்டு அப்துல் கலாம் உடல் கொண்டு வரப்பட்டது
-பேக்கரும்பு அடக்க ஸ்தலத்தை அடைந்தது அப்துல் கலாமின் உடல்
-இறுதிச் சடங்கில் வைகோ, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்
-பேக்கரும்பு கிராமத்தை வந்தடைந்தது கலாமின் புகழுடல்
-ப.சிதம்பரம், இளங்கோவனும் அடக்க ஸ்தலத்தில் காத்திருப்பு
-மண்டபத்தில் இருந்து கார் மூலம் அடக்க ஸ்தலத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி
-ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, குலாம்நபி ஆசாத் அடக்க ஸ்தலம் வந்தனர்
-விஜய்காந்த், அன்புமணியும் அடக்க ஸ்தலத்தில் காத்திருப்பு
-பேக்கரும்பில் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர், பொன்.ராதா, ராகுல் காந்தி
-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விஜயகாந்த், தமிழிசை, வாசன் அன்புமணி
-பேக்கரும்பு கிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பேசினார் ராகுல் காந்தி
-ராமேஸ்வரம் தீவு மக்கள் வெள்ளத்தில் மிதப்பதால், அஞ்சலி செலுத்த வருவோர் கார்களுக்கு அனுமதி மறுப்பு
-மண்டபத்துடன் கார்களை மறித்து நிறுத்தி பஸ், ரயில்களில் ராமேஸ்வரம் அனுப்புகின்றனர் போலீசார்
-ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
-மண்டபத்தில் இருந்து கார் மூலமாக ராமேஸ்வரம் பேக்கரும்பு சென்றடைகிறார் பிரதமர் மோடி
-கலாமின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு- கண்ணீர் தீவானது ராமேஸ்வரம்
-சாலையின் இருபுறமும் மக்கள் குவிந்து மலர்தூவி மக்களின் ஜனாதிபதிக்கு இறுதி விடை கொடுத்தனர்
-ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கலாமின் உடல்
-வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பூக்களைத் தூவி அஞ்சலி
-அப்துல் கலாம் அடக்கப்படும் செய்யும் பேக்கரும்பில் தலைவர்கள் குவிந்தனர்
-கலாம் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மத்திய, தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
-கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் உம்மன் சாண்டி., ஆந்திரா முதல்வர் சந்திரபாபு பங்கேற்பு
-ராணுவ வாகனத்தில் பேக்கரும்பு கிராமத்துக்கு ஊர்வலமாக கலாம் புகழுடல் செல்கிறது
-பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு நோக்கி கலாமின் கடைசிப் பயணம்
-லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலியுடன் இறுதி பிரியா விடை
-பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் புறப்பட்டார்
-பள்ளிவாசலில் இருந்து பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் உடல் எடுத்து செல்லப்படுகிறது
-கலாம் உடலுக்கு பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை
-தொழுகைக்குப் பின்னர் பேக்கரும்பு கிராமத்துக்கு கலாம் புகழுடல் எடுத்துச் செல்லப்படுகிறது
-சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி
-கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்
-காலை 11 மணிக்கு மக்களின் ஜனாதிபதி கலாமின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது
-பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை முடிந்த பின் உடல் இறுதிச் சடங்கு இடத்துக்கு கொண்டு செல்லப்படும்
-வீட்டில் கண்ணீர்மல்க கலாமுக்கு பிரியாவிடை கொடுத்தனர் உறவினர்கள்
-முப்படை வீரர்கள், உறவினர்கள் உடலை ஏந்தி பள்ளிவாசல் செல்கின்றனர்
-கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படுகிறது
-திருச்சியிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள்
-ராமேஸ்வரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்
-கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டத்தில் திணறுகிறது ராமேஸ்வரம்
-மிக பலத்த பாதுகாப்புப் பணியில் ராணுவம், போலீசார்
-சிறிது நேரத்தில் அப்துல் கலாமின் உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்படும்
-ஜனாஸா தொழுகைக்குப்பின் உடல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்
-இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்
-உடலை பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்ல ராணுவ வீரர்கள் கலாம் இல்லம் வந்தனர்
-9.25 மணி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, மதுரை ஏர்போர்ட் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
-8.15 மணி: பிரதமர் நரேந்திரமோடி ராமேஸ்வரம் வருகை தருவதால், இலங்கை-இந்தியா நடுவேயான கடல் பகுதியில் கூடுதல் கடற்படை படகுகள் நிறுத்தப்பட்டன.
-காலை 8 மணி: மதுரையில் இருந்து சிறப்பு ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டது. இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அதில் பயணித்தனர்.












Click it and Unblock the Notifications