அப்துல்கலாம் மறைவிற்கு கவிதையால் இரங்கற்பா வடித்த டி.ராஜேந்தர்
சென்னை: நேற்று இரவு மறைந்த மக்களின் ஜனாதிபதி திரு அப்துல்கலாம் அவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேரில் செல்ல முடியாதவர்கள் பத்திரிக்கைகள், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் அப்துல்கலாம் அவர்களின் மரணத்திற்கு தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அப்துல்கலாமின் மரணத்திற்கு காலையில் இருந்தே திரைத்துறையினர் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது இயக்குநர் டி.ராஜேந்தரும் தனக்கே உரித்தான கவிதை வரிகளில் அடுக்கு மொழியைக் கலந்து, அறிவியல் விஞ்ஞானியின் மரணத்திற்கு இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.

அவரின் அடுக்கு மொழி இரங்கலைக் கீழே காணலாம்.
இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று, வேரறுந்து வீழ்ந்து விட்டது
இளைஞர் சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஒளி விளக்கொன்று உடைந்து விட்டது
அறிவுப் பெட்டகத்தை சுமந்த அப்துல்கலாம் எனும் அற்புதக் கலம்
காலக் கடலில் தன் பயணத்தை நிறுத்தி விட்டது
நம்மையெல்லாம் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டது
மேகாலயாவில் மாணவர்களிடையே பேசும்போது
மேல்வானின் கேக ஆலயா அவரை அழைத்து விட்டது
நம்மையெல்லாம் சோக ஆலயாவில் நுழைத்து விட்டது
சொல்லால் வேண்டுமானால் அவர் முன்னாள் ஜனாதிபதி
செயலால் இந்தியர்கள் இதயத்தில் என்றுமே அவர் அழியா அதிபதி
அவரது மறைவு இந்திய நாட்டிற்கே ஈடு கட்டமுடியாத ஒரு இழப்பு
குடியரசுத் தலைவராய் அவர் ஆற்றிய தொண்டு நம் நெஞ்சை விட்டு நீங்காது
காலம் உள்ளவரை அவர் புகழ் மங்காது!
மேற்கண்டவாறு தனது ஆழ்ந்த இரங்கல்களை கவிதையில் வடித்து வெளியிட்டிருக்கிறார், இயக்குநர் டி.ராஜேந்தர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications