சபாநாயகருடன் வாக்குவாதம்- சட்டசபையில் இருந்து கிருஷ்ணசாமி குண்டுகட்டாக வெளியேற்றம்!
சென்னை: சட்டசபையில் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குண்டுகட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
தமிழக சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து சபாநாயகர் இருக்கை அருகே வந்த அவர் நேருக்கு நேராக சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் கிருஷ்ணசாமி அவரது இருக்கைக்கு செல்லவில்லை.
இதனால் அவரை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வந்ததும் கிருஷ்ணசாமி தரையில் அமர்ந்து கொண்டார்.
உடனே அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழ்நாட்டில் சாதி கலவரங்கள் இல்லை. எந்த பிரச்சனையும் இல்லை என்று சபையில் கூறப்பட்டது.
அதற்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார். 2 தினங்களுக்கு முன்பு வள்ளியூரில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் தாக்குதலை மறைத்து தவறான தகவல்களை வெளியிட்டதற்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த பிரச்சனை பற்றி பேச நான் தொடர்ந்து அனுமதி கேட்டு வருகிறேன். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இன்றும் அதே கருத்தை வற்புறுத்திய போது சபையில் இருந்து என்னை சபாநாயகர் வெளியேற்றி உள்ளார். ஜனநாயக முறைப்படி சபை நடக்கவில்லை.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications