ஜெ, கருணாநிதி, ஸ்டாலின்... சகட்டுமேனிக்கு டுவிட்டரில் கலாய்க்கும் ராமதாஸ்
சென்னை: அரசியல் தலைவர்களில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஸ்டாலினோ யாருடைய கருத்தென்றாலும் அதற்கு பதிலடியாக கிண்டலடித்து பதிவிடுகிறார் ராமதாஸ்.
பாமகவின் திட்டத்தில் திமுக அட்டக்காப்பி அடிப்பதாக கூறும் டாக்டர் ராமதாஸ், 5 ஆட்சியின் சாதனைகளாக ஜெயலலிதா கூறுவது மிகப்பெரிய பொய் என்றும் கூறியுள்ளார்.
கடந்த பத்து தினங்களாகவே இவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவும் கிண்டல் கருத்துக்கள் பலரையும் ரசிக்க வைக்கிறது. டாக்டர் ராமதாஸ் பதிவிட்ட டாப் 10 டுவிட்டுகளை நீங்களும் படியுங்களேன்.
|
இப்படி காப்பியடிக்கலாமா?
தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடிப்பது போல போராட்டம் நடத்துவதிலும் காப்பியடிக்க வேண்டுமா? என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
|
தூங்கிட்டீங்களோ?
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் எல்லா குறைகளும் களையப்படும் என்று ஸ்டாலின் கூறி வருவதால் இவ்வளவு காலமும் உறங்கிவிட்டார்களோ என்று கேட்டுள்ளார் ராமதாஸ்.
|
நானும் ரவுடிதான்
சேலம் கலெக்டரையும் விட்டு வைக்கவில்லை டாக்டர் ராமதாஸ். அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்ததாக சொன்ன கலெக்டர்தான் சிக்கியுள்ளார்.
|
அதிமுக அடிமைகள்
அதிமுகவில் அடிமைகள் அடிமைகளாகவே இருக்க வேண்டும்... அம்மாவுக்கு சமமாக நினைத்தால் இதுதான் கதியோ?என்று கைதானவரைப் பார்த்து கேட்டுள்ளார்.
|
எவ்வளவு பெரிய பொய்
சாதனை செய்யததாக அவ்வளவு பொய்யை எப்படி தயாரிச்சீங்கன்னு சொல்ல இன்னும் 36 நாள் தேவைப்படுமே?
|
அகப்பட்டதை சுருட்டுறாங்கப்பா
மக்கள் தொடர்பாளர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கே இந்த கமெண்ட். ஆட்சியிலிருந்து போகும் முன் அகப்பட்டதையெல்லாம் சுருட்டும் உத்தி தான் இது! என்று கேட்டுள்ளார்.
|
செவ்வாய்கிரக வாசிகள்
5 ஆண்டில் 1.08 கோடி பேருக்கு வேலை கொடுத்தோம் என்ற ஜெயலலிதாவின் கருத்தை கிண்டலடித்துள்ள ராமதாஸ், அப்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்துக்கிடக்கும் 85 லட்சம் பேர் செவ்வாய்கிரகவாசிகளா? என்று கேட்டுள்ளார்.
|
காதுல பூ
நீங்க அண்ணாவை பின்பற்றுகிறீர்களோ இல்லையோ.. மக்கள் காதில் பூ சுற்றம் விஷயத்தில் ஜெயலலிதா உங்களைத் தானே பின்பற்றுகிறார்.
|
காப்பியோ காப்பி
கிராமங்களில் பிபிஓ திட்டம் பற்றிய அறிவிப்புக்கு கருத்து பதிவிட்டுள்ள ராமதாஸ், பா.ம.க. தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பியடிக்கப்பட்ட 10ஆவது திட்டம் என்று கூறியுள்ளார்.
|
அடிக்கல்லே இப்பத்தான்
ஆட்சிக்கு வரும் முன்பாக 3மாதத்தில் மின்வெட்டை போக்குவதாக கூறியவர் 5ஆண்டுகளுக்கு பிறகு தான் அடிக்கல்லே நாட்டுகிறார்! என்று கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications