நீதிபதிகள் நியமனம்.. தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் களையப்பட வேண்டும்.. ராமதாஸ்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் களையப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் களையப்பட வேண்டும். புதிதாக பரிந்துரைக்கப்பட்ட 5 நீதிபதிகள் பட்டியலில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்த 5 இடங்கள் தவிர மேலும் 3 காலியிடங்கள் உள்ளன. அதில் தமிழகத்திற்குப் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். ராமதாஸின் அறிக்கையிலிருந்து:

5 நீதிபதிகள்
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக 5 உயர்நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் எனப்படும் மூத்த நீதிபதிகள் குழு அனுப்பியுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இடம் பெறாதது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் நீதிபதிகள் நியமனம் சரியான இடைவெளியில் நடைபெறவில்லை.

தமிழகத்தைக் காணோம்
கடந்த இரு ஆண்டுகளில் 8 உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்றிருந்த நிலையில், 4 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் உச்சநீதிமன்றத்தில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் 8 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 5 இடங்களை நிரப்பும் வகையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நவீன் சின்ஹா, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் குப்தா, கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தன கவுடர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் ஆகியோரின் பெயர்கள் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

பால் வசந்துகுமார் ஏன் பரிந்துரைக்கப்படவில்லை?
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான பால் வசந்தகுமாரின் பெயர் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. நீதியரசர் பால் வசந்தகுமார் திறமையான நீதிபதி என்பதுடன், நேர்மைக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருபவர். இதை நீதித்துறையில் உள்ள அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்.

முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர்
மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை கட்டாயமாக்கியது, மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்காமல் ஒரே வகுப்பில் தேக்கி வைப்பதற்கு தடை விதித்தது, மலைப்பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அமைக்க தடை விதித்தது என வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று முதன்முதலில் தீர்ப்பளித்தவர் இவர் தான். அவர் அளித்த தீர்ப்பை சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு உறுதி செய்ததிலிருந்தே அவரது நேர்மை, திறமை மற்றும் சமூக அக்கறையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஆச்சரியமாக இருக்கிறது
நீதியரசர் பால் வசந்தகுமாரின் தனிப்பட்ட திறமை உள்ளிட்ட விஷயங்கள் ஒருபுறமிருக்க, அவரது பெயர் பரிந்துரைக்கப்படாததன் மூலம் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் வெகுவாக குறைந்திருக்கிறது. கடந்த 22.07.2016-க்கு முன்பு வரை தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர்கள் இப்ராஹிம் கலிபுல்லா, நாகப்பன், பானுமதி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்தனர். ஆனால், நீதியரசர் பானுமதி மட்டுமே இப்போது தமிழகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். அதேநேரத்தில் புதிதாக பரிந்துரை செய்யப்பட்டவர்களையும் சேர்த்து மும்பை உயர்நீதிமன்றத்திலிருந்து 4 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியுள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து தலா மூன்று பேர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கர்நாடகத்திற்கு முக்கியத்துவமா
சிறிய உயர்நீதிமன்றங்கள் என்று கூறப்படும் பஞ்சாப் மற்றும் ஹரியானா, மத்தியப் பிரதேசம், கவுகாத்தி ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து தலா இருவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகியுள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், அங்கிருந்து நீதியரசர் மோகன் சந்தனகவுடர், நீதியரசர் அப்துல் நசீர் என இருவர் பெயர் ஒரே நேரத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி சிவகீர்த்தி சிங் கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த நீதியரசர் நவீன் சின்ஹா இப்போது நீதிபதியாக்கப்பட்டிருக்கிறார்.

வினாவுக்கு இடை தெரியவில்லை
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நீதியரசர் கோபால கவுடா கடந்த அக்டோபரில் ஓய்வு பெற்ற நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த இருவர் இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் இப்ராஹிம் கலிஃபுல்லா, நீதியரசர் நாகப்பன் ஆகியோர் முறையே 22.07.2016, 03.10.2016 ஆகிய தேதிகளில் ஓய்வு பெற்ற நிலையில், அவர்களுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த எவரும் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்படாதது ஏன்? என்ற வினாவுக்கு விடை தெரியவில்லை.

சமூக நீதி என்னாச்சு
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு ஆகியவை எழுத்து வடிவில் இல்லை என்ற போதிலும், அது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது சிலரின் வசதிக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் போது தகுதிக்கு தான் முக்கியம் என்று கூறி சமூக நீதியை புறந்தள்ளுவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகுதி இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கோரும் போது ஏதோ ஒரு மாநிலத்தில் இருப்பவருக்கு சமூகநீதி கொடுக்க வேண்டும் என்று கோரி தகுதியை புறந்தள்ளுவதுமாக நீதிபதிகள் நியமனத்தில் தமிழகம் தான் பாதிக்கப்படுகிறது.

புறக்கணிக்கக் கூடாது
தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவது கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. சென்னை மற்றும் தில்லி உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதியரசர் ஏ.பி. ஷா வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். ஆனால், அவருக்கு தகுதியிருந்தும் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியவில்லை. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் எப்போதோ உச்சநீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். ஆனால், பலமுறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இப்போது தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கொலீஜியம் முறையில் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவதில் உள்ள குறை இதுதான்.

துரோகம் களையப்பட வேண்டும்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் களையப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்திற்கு இப்போது பரிந்துரைக்கப்பட்ட 5 நீதிபதிகள் தவிர மேலும் 3 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக நிரப்பி, அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். கடந்த மே மாதத்தில் 3 நீதிபதிகளின் பெயர்கள் ஒரு கட்டமாகவும், மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவின் பெயர் தனியாகவும் பரிந்துரைக்கப்பட்டு நால்வரும் ஒன்றாக பதவியேற்றனர். அதேபோல், இப்போதும் 3 இடங்களுக்கான பெயர்களை பரிந்துரைத்து உச்சநீதிமன்றத்தின் அனைத்து காலியிடங்களும் ஒரே நேரத்தில் நிரப்பப்படுவதை அரசும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
“மாம்பழத்தை ஜூஸ் ஆக்கிவிடாதீர்கள்..” பாமக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கருத்து! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications