முதுபெரும் கல்வியாளர் முன்னாள் துணைவேந்தர் ச. முத்துக்குமரன் காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் மூத்த கல்வியாளரும் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் ச. முத்துக்குமரன் சென்னையில் இன்று காலமானார்(வயது 85).
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சமசீர் கல்வியை கொண்டுவருவதற்கு முன்னர் அரசு அமைத்த குழுவுக்கு தலைமை வகித்தவர் ச. முத்துக்குமரன். இவரது பரிந்துரைகளின்படிதான் சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. முன்னர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்தார்.

சென்னை பெசன்ட் நகரில் வசித்துவந்தார் முனைவர் ச. முத்துக்குமரன். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமரன் காலமானார். பெசன்ட்நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு தமிழ் உணர்வாளர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் நேரில் இறுதி மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications